பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 பரகாலன் பைந்தமிழ்

நீராரும் வளர்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும்

கூர்வாய சிறுகுருகே!

குறிப்பறிந்து கூறாயே (3.6:3)

வண்டைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே பரகால நாயகியின் கண்வட்டத்தில் நாரை யொன்று வருகின்றது. அதனைப் பார்த்துப் பேசுகின் றாள்: "சோலை வாய்ப்புப் பொருந்திய திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து வாழ்கின்ற கூரிய வாயையுடைய சிறுகுருகே! எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற் கின்ற சர்வேசுவரனான வயலாளி மணவாளன் தனது திருத்துழாய் மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; (அதாவது-மார்பிலணிந்துள்ள மணமாலை என் கொங் கைத் தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து தழுவுகின்றா னிலன்). அவனுடைய திருவுள்ளம் என்மீது மாறி விட் டதோ? அறியேன். நீ சென்று அவனது திருவுள்ளத் தைத் தெரிந்து கொண்டு வந்து எனக்குச் சொல்ல வேண் டும்; நானொருத்தி இருக்கின்றேன் என்கின்ற நினை வோடேயிருந்து இவ்விடம் வருவதாக உள்ளானா? அல்லது, இத்தலையை மறந்தே யொழிந்தானா? அவனு டைய கருத்து இருக்கும் நிலையை அறிந்து கொண்டு வந்து எனக்குச் சொல்வாய்' என்கின்றாள்.

குறிப்பறிந்து கூறாய்: "அவனுடைய திருவுள்ளத்தை. அறிந்து வந்து என்னிடம் சொல்லுக' என்ற பொருள் தவிர, மற்றொரு பொருளையும் சிந்திக்கலாம். அதாவது - நான் உனக்குச் சொல்லும் தூது வார்த்தையை அவனிடம் சென்று திடீரென்று சொல்லிவிடாதே; எந்தச் சமயத்தில் சொன்னால் பலிக்குமோ அந்தச் சமயத்தில் சொல்லவேண்டுமாதலால் அந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்லுக'