பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறைய நுபவம் 449

முக்தர்கள் ஒரே காலத்தில் பல உடலங்களைப் ஏற்பதாக உபநிடதங்கள் பகர்கின்றன; அது பொருந்துவது எம்பெரு மான் அருளால் என்பது போலக் கொள்ளலாம்.

வடிவழகை வருணித்துப் பேசுதல்: அழகு என்பது ஒரு தத்துவம். உலகில் அழகுக்கு ஓர் எல்லை காண்பது, அவ் வடிவத்தைப் படைப்பவரின் தொழிற் குறைவினாலே பன்றி, அழகு என்னும் பொருளுக்கோ எல்லை இல்லை’ என்று சித்தாந்தம் செய்து காட்டுவன் கம்பநாடன் சூர்ப் யணகையின் வாய்மொழியாக சீதையைக் கண்டவுடன்,

அரவிந்த மலருள் நீங்கி

அடியினை படியில் தோயத் திருஇங்கு வருவாள் கொல்லோ

என்றகம் திகைத்து நின்ற" (அரவிந்தம்-தாமரை, இணை-இரண்டு; திரு.

இலக்குமி, அகம்- மனம்)

என்று திகைத்து நின்ற சூர்ப்பனகை அழகு தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லுகின்றாள்.

கண்பிற பொருளில் செல்லா;

கருத்தெனில் அஃதே: கண்ட பெண்பிறந் தேனுக் கென்றால்

என்படும் பிறருக்கு” என்கின்றாள். பக்தர்களை இவ்வழகு ஈடுபடுத்தும் பாடு சொல்லுந் தரமன்று. அழகிய மணவாளனின் ஒவ்வோர் உறுப்பினழகிலும் ஈடுபட்டுப் பேசிய திருப்பாணாழ்வார்,

3. ஆரணி-சூர்ப்பண-80 4. டிெ-59 5. டிெ-60

29 س-.t_j . grr