பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறைய நுபவம் 469

இராமாவதாரத்தைப்பற்றிப் பேசும் இப்பாசுரத்தில் மாயமானாகி வந்த மாரீசனையும் இராவணனையும் கொன்று ஒழித்த வரலாறுகள் கூறப்பெறுகின்றன.

கிருட்டிணாவதாரம் : அவதாரங்களில் ம | னி ட யோனியில் பிறந்து மக்களிடையே வாழ்ந்து செளலப் பியம் செள சீல்யம் போன்ற திருக்குணங்கட்கு எல்லை நிலமாகவும் இடையே சுவாமித்துவம் போன்ற திருக் குணங்களையும் பிரகாசப்படுத்தியது கிருட்டினாவ தாரமாதலால் ஆழ்வார் பெருமக்கள் இந்த அவதார சேஷ்டிதங்களைப் பேசித் தம்மையே மறக்கின்றனர். திருமங்கையாழ்வார் அநுபவித்து மகிழும் சில பாசுரங் களைக் காண்போம்.

வில்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்

வேழமும் பாகனும் வீழச்

செற்றவன் தன்னை புரம் எரி செய்த

கிவன் உறு துயர்களை தேவை

பற்றலர் iயக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர்முன்நின் றானை (2.8:1)

1.வில்விழவு-ததுர் யாகம்; மல்லு-மல்லர்கள்: வேழம்-குவலயா பீடம், செற்றவன்-அழித்த வன்; சிவன் உறுதேவை- பிரமஹத்தி; பற்றலர்பகைவர்;

என்ற பாசுரத்தில் கண்ணன் வில்பெரு விழவை நடத்தின கம்சன், சானூரன் முஷ்டிகன் என்ற மல்லர்கள், குவலயா பீடம் இவர்களை அழித்த நிகழ்ச்சிகளையும் சிவனுக்கு நேர்ந்த பிரமஹத்தி சாபத்தைப் போக்கின செயலையும் பார்த்தனுக்குத் தேர் கடவி பகைவர்களை ஒழிந்த வரலாற்றையும் அதுசந்தித்துக் கிருட்டினாவதாரத்தில் ஈடுபடுகின்றார். திருவல்லிக்கேணி பார்த்த சாரதியை