பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பரகாலன் பைந்தமிழ்

கலியன் தாம் பிறந்த குடிக்கேற்ப இளமையிலேயே ஆயுதப் பயிற்சி பெற்று அதில் நன்கு தேர்ச்சி அடைந்தார். தந்தையாருக்குப் பிறகு ஆலி நாட்டின் தலைவராகவும் சோழ மன்னனின் தானைத் தலைவராகவும் விளங்கினார். சோழ மன்னருக்குக் கொடியவர்களோடு போர் நேருங் காலத்தில் படைகளோடு முன் சென்று பகையை வென்ற தனால் பரகாலன் என்ற புகழ்ப்பெயரும் இவரை வந்த டைந்தது. இவரது பராக்கிரமத்தை நன்கு உணர்ந்த சோழ அரசன் இவரைத் திருமங்கை நாட்டுக்குச் சிற்றரச எாத் முடி சூட்டினான். குறுநிலத் தலைமை ஆண்ட திரு. மங்கை மன்னன் அரசுப்பணியைக் குறைவின்றி நடத்திப் புகழ் பெற்றார்.

திருமங்கை மன்னன் ஆட்சியில் அவர் அமைத்துக் கொண்ட அமைச்சரவையில் நீர் மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன் என்ற நால்வர் இருந்தனர். இவர் இவர்ந்து வரும் குதிரை ஆடல்மா என்பது. இவர் இகவுலக வாழ்க்கையில் மிகவும்: அதிகமாக ஈடுபட்டிருந்தார். கலையுணர்ச்சி மிக்கவரா கவும் திகழ்ந்தார்.

கலையினொடும் கலைவாணர் கவியினொடும்

இசையினொடும்......பொழுது போக்கி:

என்று தம் காலத்தைக் கலைஞரோடு கழித்தார். இதற்கு இவர்தம் பா சுரங்களிலேயே அகச்சான்றுகள் உள்ளன. அவை பிறிதோரிடத்தில் விளக்கப்பெறும்.

திருமணம்: இங்ங்ணம் இன்ப வாழ்வில் பொழுது போக்கி வருங்கால் இவர் ஆட்சிக்குட்பட்ட நாட்டில்

2. கலிங்கத்துப் பரணி-277 3. இயல்-3 காண்க.