பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 47?

|உறிஆர்ந்த-உறிகளில் நிரம்பிய, ஆர்க்க. பிணைக்க, தறி-கட்டுத்தறி, களிறு-யானை; தட கண்கள்-பெரியகண்கள்; பனிமல்கும்-நீர் நிரம் பும்! என்று உறிகளில் நிரம்பிய வெண்ணெயை வாரி உண்டது, உரலோடு கட்டுண்ட காலத்து கண்கள் குள மானது போன்ற கண்ணனது செயல்களை நினைந்து களிக்கின்றார்,

திருநறையூர் நம்பியை மங்களாசாசனம் செய்யும் போது, r

ஒளியா, வெண்ணெய் உண்டான்என்று

உர்லோடு ஆய்ச்சி ஒண்கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு

விம்மி அழுதான் (6.7:4) (ஒளியா-மறைந்து நின்று; ஒண்கயிறு-அழகிய தாம்புக் கயிறு: விளியா-கோபித்து, ஆர்க்ககட்ட, ஆப்புண்டு-கட்டுண்டு; விம்மி-விக்கி விக்கி) என்றும்,

பந்துஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து கந்துஆர் களிற்றுக் கழல்மன்னர்

கலங்க, சங்கம் வால் வைத்தான் (6.7:8) (கந்து ஆர்-(மதநீரின்) மனம் பொருந்திய, கலங்க-மதி கலங்குமாறு; சங்கம்.--பாஞ் சன் னியம்) என்றும் கண்ணனது சில திருவிளையாடல்களை நினைவு

¦ மகிழ்கின்றார்.

திருமாலிருஞ்சோலைமலை எம்பெருமானை மங்களா சாசனம் செய்யும்போது,