பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {} பரகாலன் பைந்தமிழ்

என்ற முதல் திருமொழியின் முதல் பாசுரம் தொடங்கிப் பத்துப் பாசுரங்களால் முதல் திருமொழியை நிறைவு செய்கின்றார்.

திருத்தலப் பயணங்கள்: அந்தணனாக வந்த எம்பெருமான்மூலம் திருமந்திர உபதேசம் பெற்றதும், திருமந்திரம் பிறந்த வரலாற்றுப் புகழ் பெற்ற பதரியைச் சேவிக்க வேண்டும் என்ற ஆர்வம் கிளர்ந்தெழுகின்றது. உடனே வடநாட்டுத் திருத்தலப் பயணத்தை மேற் கொள்ளுகின்றார். இதற்குக் காரணம் என்ன? திரு மங்கையாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றில் இஃது ஒர் முக்கியமான திருப்பம். வாள் வலியால் மாயோனிடம் மந்திரம் (திருமந்திரம்) கொண்ட நிகழ்ச்சி முன்னர்க் குறிப்பிடப் பெற்றதல்லவா? இதனை, வாழி, பரகலான்! வாழி, கலிகன்றி வாழி குறையலூர் வாலிவேந்தன்-வாழியரோ மாயோனை வாள்வழ்யால் மந்திரம்கொள்

மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல்."

என்ற தனியனாலும் அறியலாம். மந்திரம் பெற்ற மகிழ்ச்சியால் ஆழிவாருக்கு அர்த்தபஞ்சக ஞானம்!

10. பெரிய திருமொழி தனியன்.

11. அர்த்த பஞ்சகம்: 1. ஆன்மாவின் இயல்பு, 2. ஈசுவரனது இயல்பு, 3. ஆன்மா அடையும் பயன், 4. அப்பயன்ை அட்ைதற்கு உபாயம் (வழி), 5. அப் பயனை அண்டதற்குப் பகையாய் ஆள்ளவைகள். இவை முறைய்ே 1. ஆன்ம சொரூபம், 2. ஈசுவர சொரூபம் 3. பல சொரூபம், 4. உபாய சொரூபம். 5. விரோதி சொருபும் எனப்படும். இவற்றைப் பற்றி விளக்கம் அடைதலே அர்த்தப்ஞ்ச்க ஞான்ம்' எனப்படும்.