பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 பரகாலன் பைந்தமிழ்

ஆராவமுதனிடம் ஈடுபாடு: திருமங்கையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர்தம் பாசுரங்களால் அறிய முடிகின்றது. மறைந்துபோன திவ்வியப் பிரபந்தம் வெளிவருவதற்குத் திறவுகோலைத் தந்தவரல்லவா இப் பெருமான்? இந்த ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானைக் 'குடந்தை உத்தமன்' என்கின்றார்; தண்குடந்தை நகராளன்' 'தண்குடந்தைக் குடம் ஆடி' என்று பேசு கின்றார்.

கொந்துலாம் பொழில்சூழ் குடந்தைத்தலைக்

கோவினை............ எந்தையை......மறக்கேனே'. என்று மனம் உருகப் பாடுகின்றார் திருநறையூர்த் திரு மொழியில்.

திருக்குறுந் தாண்டகப் பாசுரம் ஒன்றில்,

துரவிசேர் அன்னம் மன்னும்

சூழ்புனல் குடந்தை யானை பாவியேன் பாவி யாது

பாவியேன் ஆயி னேனேக் (துரவி-சிறகு; பாவியாது-சிந்தியாமல்) என்று வருந்துகின்றார். பழுதே பலபகலும் போயின’ என்று அங்கலாய்க்கின்றார். திருவுக்கும் திருவாகிய அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றம் தன்னைச் சேவிக்கும் போதும் இந்த நகர் எம்பெருமான் ஆழ்வார் மனக்கண்முன் காட்சி தருகின்றார்.

1. பெரி. திரு 1.5:4

. டிெ 3.6:5 . ைெடி, 3.6:7 . டிெ. 7.3:3

2

3

4. 5. திருக்குறுந்-14