பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 岛岳

மரகத மணித்தடம் (திருவாய் 10.1:8) என்றும், வாசத் தடம் போல் வருவானே" (டிெ 8.5:1) என்றும் தடாக மாகச் சொல்லக் கடவதிறே' என்பதாம். மேலும் 'உம்பொன்’ என்கின்றது அல்லாத ஆழ்வார்களை; 'மத்துறு கடைவெண்ணெய் களவினிலுரவிடை யாப் புண்டு, எத்திறம்: உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே (டிெ 1.3:1) என்று அவதாரத்தை அநுசந்தித்தே அவர்கள் மோகித்தது; அர்ச்சாவதாரத்திலிறே இவள் மோகிப்பது என்ற வியாக்கியானப் பகுதியும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

இந்த ஆழ்வார் ஆரா அமுதனிடம் கொண்டிருந்த ஈடுபாடு இவர் அருளிய திருஎழுக்கூற்றிருக்கை' என்ற சித் திரக் கவியாலும் தெளிவாகின்றது. சார்ங்கபாணித் திருக் கோயில் ஊருக்கு நடுவே நடுநாயகம்போல் அமைந்துள் ளது இத்திருக்கோயில் கும்பகோணத்திலுள்ள எல்லாக் கோயில்கனையும் விடப் பெரிது. கோபுரமும் அப்படியே மிகப் பெரிதாக அமைந்துள்ளது; பதினொரு மாடங் களைக் கொண்டது. பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ஓர் இரதம் போல் அமைக்கப் பெற்றுள் ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் உள்ளன. இதனை நோக்கிய திருமங்கையாழ்வாரும் இத்திருக் கோயில் எம்பெருமானைப்பற்றி மங்களாசாசனம் செய் துள்ள 'திருஎழுக்கூற்றிருக்கை' என்ற பிரபந்தம் இரத பந்தம்' என்ற சித்திரக் கவியாக அமைத்தனர். இது சரணாகதித் தத்துவத்தை விளக்கும் பாசுரமாகும்.

"குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை வருபுனல் பொன்னி மாமணி அலைக்கும் செந்நெல் ஒண்கழனித் திகழ்வனம் உடுத்த