பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨盘 பரகாலன் பைந்தமிழ்

திருத்தலச் சூழ்நிலை : இத்தலம் அமைந்துள்ள இடத்தில் சிறு துளிகளையுடைய காளமேகங்கள் அதிர் கின்றன. தோகைகளையுடைய மயில்கள் ஏறமுடியாமல் உன்னதமான மலையுச்சியில் கீழ்வயிறு தழுவும் படியாக ஏறிச் சென்று தோகைகளை விரித்துக் கூத்தாடுகின்றன. (1). மலை போன்ற வடிவினையுடையனவாய், வடிவுக் கேற்ற மிடுக்கையுடையனவாய், மிடுக்குக்கு உரிய சினத்தையுடையனவாய் மதக்களிறுகள் அஞ்சும் படியாக வாள்போன்ற பற்களையுடைய சிங்கங்கள் திரிகின்றன (2). இந்திர மணிமயமான பாறைகளின்மீது வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய படுக்கையின்மீது களிறுகள் தம் பிடிகளுடன் கிடந்து உறங்குவதற்குப் பாங்காக வண்டுகள் இன்னிசை பாடுகின்றன. (3). பன்றி. கள் தலை குனிந்து மாணிக்கப் பாறைகளைப் பிளக்க அதனால் பெயர்ந்த மணிகள் மலையருவிகளால் அடித்து வரப் பெறுகின்றன (4). முகில் வரை எட்டி வளர்ந்த குருக்கத்திப் பூஞ்சோலைகளில் வண்டுகள் தேனினைப் பருக நுழைந்து இசைபாடுகின்றன (5). அசோக மலர்கள் விரியும் போது செந்நிறத்தோடு திகழும் அழகைப் பேதை வண்டுகள் நெருப்பென மயங்கி அஞ்சுகின்றன (6) . மிளகுக்கொடிகள் விண்ணை எட்டும் வேங்கை மரங்களைத் தழுவிப் படர்ந்து நிற்கும் சிறு மலைகளில் வேங்கை வரிப்புலிகள் நடமாடுகின்றன (7). இருள் சூழ்ந்த மலை முழஞ்சுகளில் பெரும்பசியுடன் மலைப் பாம்புகள் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளன (8). கறுத்த மாமுகில்கள் நீரின் கனத்தாலே இயங்க முடியாமல் ஓரிடத்தில் நின்று இடியோசைகளை எழுப்ப அவற்றை யானைகளின் பிளிறல்கள் என மயங்கி மலைப் பாம்புகள் மலைபெயர்ந்தாற்போல் பெயர்ந்து காத்துக் கிடக்கின்றன (10). இது பிரிதி அமைந்திருக்கும் இமயத் தின் சூழ்நிலை.