பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பரணிப் பொழிவுகள் சங்கிராம விசயோத்துங்கவர்மன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அடி:ஐ வென்று அத்தாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் கங்கை கொண்ட சோழன். அத்தப் போர்க்களத்தில் பெருகியோடிய குருதி வென்னத்தில் அளவுக்குமீறி விளையாடினமையாலும் நீத்தினமையாலும் சில பேய்களின் முதுகுகள் வளைந்து கூளுகின் தன. இச்செய்தி,

  • பரக்கு மோதக்க டாரம ழித்தநாள்

பாய்த்த செம்புன லாடியு நீந்தியுங் குரக்கு வாதம்பி டித்தவி தத்தினிற் குடிய டங்களும் கூன்முது காணவும்.”* 'ஒதம்-கடற் சார்பு, செம்புனல்-குருதி, விதத்தினில்-விதத் தால், குரக்கு வாதம்-ஒருவித நோய், குடி அடங்கலும் சில பேய்க் கூட்டம் முழுவதும்) என்ற தாழிசையால் அறியப்பெறுகின்றது. இராசேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தி வெற்றி பெற் திருத்த போதிலும் இவன் கங்கையும் கடாரமும் கொண்டமை தான் அக்காலத்தில் மக்கள் மனத்தையும் புலவர்கள் உள்ளத் தையும் ஒருங்கே பிணித்துள்ளன. இதல்ை இந்த வெற்றிச் சிறப் பினச் சயங்கொண்டசர் தம் நூலிலும், ஒட்டக்கூத்தர் தம் மூன்று உலாக்கனிலும் போற்றிப் புகழ்வாராயினர். மேலும் இவ் வகுஞ் செயல்கள்பற்றியே இராசேந்திரனுக்குக் கங்கை கொண்ட சோழன்', 'கடாரங் கொண்டான்' என்னும் சிறப்புப் பெயர்களும் வழங்கினதாகக் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். அடுத்து, இராசேந்திரன் மக்களாகிய இராசாதி ராசன், இராசேந்திர தேவன் (இராசேந்திரன்-11); இராசமகேந்திரன் மும்முடிச் சோழன்), வீர ராசேந்திரன் ஆகிய நால்வர் பெற்ற வெற்றிச் சிறப்புக்கள்போற்றப்பெறுகின்றன.இவர்களுள் இராசாதி

سبلا

33. தாழிசை-151. கடாரத்தில் போர்புரிந்த செய்தி இவனது மெய்க்கீர்த்திகளில் குறிக்கப்பெருததால் இவனது ஆட்சிக் காலத்தில் இது நிகழவில்லை என்றும், இவனது இளமைப்பரு வத்தில் வீர ராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படையில் இவனுங் கலந்துகொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்றும் கருதுகின்ருர் திரு T. W. சதாசிவ பண்டாரத் தார் (பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி III பக். 5-அடிக் குறிப்பு 2. காண்க.)