பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 99 என்று அபயற்கன்றித், தண்டினுக்கும் எளியளுே *** எனச் செருக்குடன் மொழித்தபோது இதனேக் கூறினன். உன்னைப் போலவே அவ்வேந்தனும் சிறிதும் ஆராயாமல் போர்புரித்து துன்பம் எய்தினன்' என்பதை "இம் முறையே என்ற தொடரால் குறிப்பாகப் புலப்படுத்துகின்ஞன், பேய்கன் உலகம்’பற்றிய பொழிவில் உறுப்புக் குறையுள்ள பேய்களைக் குறிப்பிட்டேன் அல்லவா ? குருட்டுப் பேய்கணேப்பற்றிக் கூறும் கவிஞர் சக்கரக் கோட்டப் போரைக் குறிப்பிடுகின்ருள். இத்தப் போர் திகழ்த்து குலோத்துங்கன் வெற்றி பிறகு போர்க்களத்தில் பேய்கள் கூழ் அடுகின்றன. குருதியையும் கொழுங்குடரையும் சேர்த்துச் சமைக்கும்பொழுது ஆவலுடன் அருகிலிருந்துகொண்டு தாழியை எட்டி எட்டிச் சில பேய்கன் பார்க்கின்றன. வெப்பம் மிக்க கூழ் தெறித்தலால் அவை சில பேய்களின் கண்களில் விழுந்து அப்பேய்களைக் குருடுகளாகச் செய்கின்றன. இதனைக் கவிஞர்,

  • விருத ராசப யங்கரன் முன்ளுேர்நாள்

வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங் குருதி யுங்குட ருங்கலந் தட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டாணவும்” (விருதராச பயங்கரன்-குலோத்துங்கன்; விருது-வெற்றிச் சின்னம்; குருதி-செந்நீர் அட்டசமைத்த} என்ற தாழிசையில் குறிப்பிடுகின் ருர். வெற்றிச் சின்னங்களை அணிந்து கொண்டிருந்த ஆரும் விக்கிரமாதித்தன், சயசிங்கன் முதலிய வேந்தர்களே வென்றமையால் குலோத்துங்கனுக்கு இப் பெயர் ஏற்பட்டது. முதற் குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்ததை இன்னொரு விதமாகவும் அழகாக விளங்குகின்ருள் கவிஞர். மாற்றரசர்களின் செல்வ மகளாக வளர்த்து வந்த வீர மகளைக் குலோத்துங்கன் மணம் புணர்ந்தனன் என்றும், அவர்கள் தம் மகளுக்குச் சீதனப்பொருள் கொடுப்பார் போல யான, குதிர்ை. முதலிய பல வகைப் பொருள்களை வழங்கினர் என்றும் குறிப்பிடுகின்ருர். இதனை,

  • சரிக ளந்தொறுந் தங்கள்ச யமகள்

தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும் 54. தாழிசை-376. 55. தாழிசை-147.