பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் # Of டுண்ட கூழொடு நாவுஞ்சு குண்டுபுக்(கு) உள்வி ழுந்தற ஆமைகள் ஆனவும் " (பொன்னி.காவிரி; மதுரிக்க-இனிக்க:'அட்டு-சமைத்து) என்ற தாழிசையில் காட்டுகின்ருள். இத்தப் போரில் பாண்டியர் அழிய, அவர்கட்குக் குற்றேவல் புரிந்து வந்த பெண் பூதகணங் கள் அனைத்தையும் பிடித்து வத்த ஆண் பேய்கள் அவற்றைப் புணர்த்தளுல் குறுகிய வடிவமுள்ள பேய்கள் பிறக்கின்றன. இதனே, ' பண்டு தென்னவர் சாயஅ தற்குமுன் பணிசெய் பூதக ணங்கள இனத்தையுங் கொண்டு வந்தபேய் கூடிய போதில்அக் குமரி மாதர்பெ றக்குற ளானவும்" (தென்னவர்-பாண்டியச் சாய-அழிய குமரி மாதt-இண்ய குறட் பெண் பூதங்கள் ; என்ற தாழிசையில் குறிப்பிடப்பெற்றுள்ளதைக் காணலாம். குலோத்துங்கன் பாண்டியரை எதிர்த்தபொழுது, பாண்டி நாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தது. ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வோரரசன் ஆண்டு வந்தான். அவர்களவனேரும் ஒன்று சேர்ந்து குலோத்துங்கனே எதிர்த்தனர். குலோத் துங்கன் அவர்கள8னவரையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான். இதனை எங்கராயன் வாய் மொழியாக, “ விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலும்நீ’’’ (தண்டு-சேஆன; மீனவர்.பாண்டியர்; கேடு-அழிவு) என்று காட்டுவர் கவிஞர். அதன் பிறகு குலோத்துங்கன் தன் வெற்றிக்கு அறிகுறியாகக் கன்னியா குமரி, அதற்கு வடக்கே பத்துக் கல் தொலைவிலுள்ள கோட்டாறு ஆகிய இடங்களில் வெற்றித் தூண்களே நிறுவினன். இச் செய்தி, 58. தாழிசை-148. 59. தாழிசை-150. 60. தாழிசை.381,