பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 器 தமிழிலியே முதன் முதலாகச் செய்யப்பெற்றதாலும் இதுவும் முதல் இால் ஆகின்றது. மேலும், சிலப்பதிகாரத்திற்கு இல்லாக ஒரு பெருமையும் இதற்கு உண்டு. மாடலன் மூலமாகக் கேள்வியுற்று கோவலன் வரலாற்தைப் பொருளாகக் கொண்டு இளங்கே அடிகள் தம் காவியத்தை அமைத்தார். ஆணுல், சயங்கொண்டாரோ தாம் நேரில் கண்டி, கேட்ட கலிங்கப் போர் வரலாற்தைப் பொருளாகக் கொண்டு தம் நூலே அமைத்துள்ளார். கேள்வியுற்ற செய்தியைவிட, நேரில் கண்ட செய்தி தெளிவாக மனத்தில் அமையும் என்பதை நாம் நன்கு அறிவோம். பிறிதொரு கருத்தின் யும் உங்கள் முன் வைக்கின்றேன். தமிழ் இலக்கியச் செல்வங்காேப் பேரிலக்கியங்கள் என் தும் * சிற்றிலக்கியங்கள் ' என்தும் வகைப்படுத்திக் கூறலாம். அடிகளால் மிகுந்து, பொருள்களால் சிறந்து, மக்கள் வாழ்வை யொட்டி அவர்கள் வாழ்வைச் செம்மைப் படுத்தி இன்பம் கல்கத் தோன்றியவையெல்லாம் பேரிலக்கியங்களாகும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவைகள் தாம் கூறும் பொருட்பாகுபாட்டால் பெயர் பெற்துத் திகழும். அடிகளால் குறைந்து கற்:னே மிக்குக் கடவுளர்களேயும், வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பைப் பெருக்கிய மன்னர்களையும், கொடைவண்மையாலும் பிறவற்ருலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்ற செல்வர்கள் இவர்களேயும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இயற்றப்பெறும் இலக்கியங்களே சிற்றிலக்கியங்கள் என்ற பிரிவில் அடங்கும். பிரபந்தங்கள் : என்ற வடசொல்லால் வழங்கப் பெறுவன வெல்லாம் சிற்றிலக் கியத்தின் பாற்பட்டவையாகும். கி. பி, எட்டாம் நூற்றண்டு முதல் சிற்றிலக்கியங்கள் வளரத் தொடங்கி நாளடைவில் பலவகையாய்ப் பல்கிப் பெருகியுள்ளன. இவை கோவை, உலா, பரணி, பிள்ளேத் தமிழ், அந்தாதி, கலம் பகம், தூது, குறவஞ்சி, பள்ளு, மடல், மாலே என்று பல்வேறுபட்ட வகைகளாகும். இவற்றுள் உலகியல் கடந்த கற்பனை நிகழ்ச்சி களும், புராணக் கதைகளும், உயர்வுநவிற்சி யணிகளும், திரிசொல் லாட்சிகளும், இல்பொருள் உவமைகளும் நிறைந்து கற்பவர் உள்ளங்களேக் கவர்ந்து நிற்கும், இச்சிற்றிலக்கியங்கள் (பிரபந் தங்கள்) தொண்ணுாற்ரு:று வகைப்படும் என்று கூறும் மரபு ஒன்று உண்டு. சிற்றிலக்கியங்கள் பற்றிய இலக்கணம் கூறும் நூல்களும் பிற்காலத்தில் எழுந்தவையேயாகும். பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலே என்னும் வெண்பாப் பர்ட்டியல், நவநீதப்