பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் f G8 அவனுடைய சேனே வீரர்களும் பகைவர் சேனேக்கு அஞ்சாமல் உற்சாகமாகப் பேரிரைச்சலுடன் போர் புரிகின்றனர். அத்தப் பேரொலியைத் தசங்க முடியாமல் சில பேய்களின் காதுகளிலுள்ள மெல்லிய சவ்வு பிய்த்துபோய் அவை செவிடுகளாகின்றன. இதனைச் சயங்கொண்டார், " ஆன சாயவ டுபரி ஒன்றுகைக்து ஐம்படைப்பரு வத்தப வன்பொருஞ் சேனை வீரர்தின் ருர்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெங்களத் திற்செவி டானவும்' (ஆனே.யானே; பரி-குதிரை: உகைத்து-செலுத்தி; ஐம்படைப் பருவம்-ஐம்படைத்தாலி அணிந்துள்ள இளமைப் பருவம்; ஆர்ப்பு-பேரொலி) என்று சித்திரித்துக் காட்டுவர். திமிரி என்ற இடம் எங்குள்ளது என்பது தெரியவில்லை, இங்கனம் குலோத்துங்கன் பல போர்களே நிகழ்த்தி வருங்கால் துங்கபத்திரை நதிக்கரையில் போர் ஒன்று திகழ்கின்றது. ஆளும் விக்கிரமாதித்தன் என்பவன் அப்பொழுது குத்தள நாட்டை ஆண்ட அரசன் ஆவான். குலோத்துங்கன் அவன்மீது படை எடுத்துச் சென்று, அவனேயும் அவனுடைய தம்பியாகிய சயசிங் கனையும் வென்று அவர்களேத் துங்கபத்திரை நதிக்கப்பால் துரத்தி, அவர்களுடைய தலைநகரமாகிய கலியாணபுரத்தைத் தனக்குரிமையாக்கிக் கொள்ளுகின்றன். இதனைக் கவிஞர். " துங்க பத்திரைச் செங்க ளத்திடைச் சோள சேகரன் வாளெ றிந்தயோர் வெங்க தக்களிற் றின்ப டத்தினுல் வெளிஅ டங்கவே மிசைக விக்கவே”* (செங்களம்-போர்க் களம்; சோளன்.சோழன்; கதம்-சினம்; படம்-முகபடாம்; மிசை-கூரை) என்று குறிப்பிடுகின் ருர். குலோத்துங்கன் யானைகளின் முகப் போர்வையால் காளி கோயிலின் முகட்டை மூடின செய்தி இதில் குறிப்பிடப்பெறுகின்றது. மீண்டும் மைசூர் நாட்டைச் சார்ந்த அளத்திப் போரில் குந்தள அரசனை வென்ற செய்தி யையும் கூறுகின்ருர் கவிஞர். இதனே, 64. தாழிசை.149. 65. தாழிசை-103.