பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் | O'7 பேரசர்கட்குச் சிற்றரசர்கள் திறைப்பொருள் கொடுக்கும் வழக்கம் நடைமுறையிலிருந்து வத்தது. மணி மாலை, பொன்னணி: முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச் சரடு, மணிக்குவியல், மகரக்குழை முதலியவையும், யானே, குதிரை, ஒட்டகம் முதலியவையும் அவர்கள் தரும் திறைப் பொருள்களாகும். திறைப்பொருள்கள் எகுதுகளின்மீது ஏற்றி வந்தாகத் தெரிகின்றது. பகடு சுமத்தன திறைகள்’’’ என்ற தொடரால் இத&ன அறியலாம். சிற்றரசர்கள் பேரசர்கட்கு இளமகளிரைத் திறைப்பொருளாகத் தருவதுண்டு.” அம் மகளிர் தனியாக வாழும் இடத்தை வேளம் என்று குறிப்பிடுவர்." இவர்கள் அரசர்களின் அந்தப்புரத்தில் சேடியராகப் பணியாற் றுவர். இது போலவே சிற்றரசர்கள் பேரரசர்கட்குக் குற் றேவல் புரிவர். கரிகாலன் காலத்தில் இங்ஙனம் சிறையாகப் பிடித்துவரப்பெற்ற மகளிர் அம்பலம் அல்லது கோயில்களில் திருப்பணி செய்வோராக அமர்த்தப்பெற்றனர்' என்பது ஈண்டு நினைவு கொள்ளத் தக்கது. பேரரசர்கள் தம்மையடைந்த சிற்றரசர்கட்கு அஞ்சல் அளிக் கும் வழக்கத்தையும் அறிகின்ருேம். அதற்கு அறிகுறியாக அவர்கள் தம் அடியிணைகளை அந்தச் சிற்றரசர்களின் முடி மீது வைத்து அருள் செய்வர். இதனை,

  • அரசர் அஞ்சலென அடியி ரண்டுமவர்

முடியின் வைத்தருளி’** என்று கவிஞர் கூறுவதைக் காண்க. காஞ்சியில் திறைபெற்ற குலோத்துங்கனக் குறிப்பிடுங்கால் இவ்வழக்கம் காட்டப்பெறு கின்றது. மேலும், பேய்கள் கூழடுங்கால் அரிசி குற்றும்போது பாடும், " வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர் தங்கள் மணிமுடியும் 81. தாழிசை.334, 335, 336. 82. தாழிசை-272. 83. தாழிசை.41. 84. தாழிசை-40, 85. தாழிசை-326. 86. தாழிசை.325. 87. பட்டினப்பாலை - வரி (246-49) 38. தாழிசை-337,