பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 118 என்ற தாழிசையால் அறியலாம். இதனே இக்காலத்தில் காவடி எடுப்போர் தாக்கிலும் உடலிலும் அம்புகளைக் குத்திக் கொள்வ துடன் ஒப்பிட்டு உணரலாம். தெய்வத்திற்கு எருமைக் கடன் வைப் பலியிடுங்கால் உடுக்கை முழங்குவர். மணவினே முதலிய மங்கலச் செயல்களில் அறுகம்புல்லை. தெல்லுடன் இடல் மங்கலமாகக் கருதப்பெற்றது. குலோத்துங்கனுக்கு மறையவர் முடிசூட்டியபோது இவ்வழக்கம் மேற்கொன்னப் பெற்றதகுல் இதனை அறியலாம். கோயில், அரண்மனை முதலியவற்றிற்குக் கடைகால் பறித்த உடன் அதில் பொன் மணி முதலியவற்றை இட்டுப் பின்னர் அடித்தளம் அமைத்தல் வழக்கமாக இருந்தது. ' அரசர் போன்ற உயர்ந்தோருக்கு விருத்து அளிக்குங்கால் பகல் விளக்கு வைத்தலும், பரப்பிய ஆடையின்மீது பொற் கலத்தை வைத்து அதில் உணவிடுதலும் அக்கால வழக்கங்க ளாகும். இன்றும் கோயிலில் கடவுளர்க்குப் பாவாடை போடு தல்’ என்ற வழக்கம் இருந்து வருதல் ஈண்டு கருதத்தக்கது. வெறு நிலத்தில் உண்கலம் பரப்ப வேண்டின் திலத்தில் நீர் தெளித்துப் பின் கலம் வைத்தல் வழக்கமாக இருந்தது. 19 கூழுக்கு வெங்காயத்தைக் கறித்துண்ணும் வழக்கம் இருந்தது.' அக்கால உண்கலங்களில் புளகச் சின்னம் எனப்படும் சேசற்றுத் தட்டு, மண்டை என்பன சில. ! ? மகளிர்பால் வழங்கிய சில வழக்கங்களும் இந்நூலால் அறியப்பெறுகின்றன. கணவரைப் பிரிந்த மகளிர் கூடற் சுழி இழைத்து, அச்சுழி கூடின் கணவர் விரைந்து வருவ ரென்றும், அது கூடாதாயின் அவர் வரக் காலம் நீட்டிருக்கும் என்றும் கருதும் வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது.* கணவர் இறந்த பின் கற்புடைப் பெண்டிர் அக் கணவருடன் திக்குளிக்கும் வழக்கமும் அக்காலத்தி லிருந்தது. இதனைப் போர்களக் காட்சியுள் ஒன்றனுக்கு உவமை கூறுங்கால்,

  • காந்தருடன் கனல் அமளி அதன்மேல் வைகும்

கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின்.: (காந்தர்-கணவர்: கனல்-தி, அமளி-படுக்கை வைகும்தங்கும்) 106. தாழிசை-114. 111. தாழிசை-579. 107. தாழிசை.264. 112. தாழிசை.558. 108. தாழிசை 98. 113. தாழிசை 51. 109. தாழிசை.561. 114. தாழிசை-480. 110. தாழிசை-557, 8