பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் i i 5

  • தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி

தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல’’’ (தோலாத-தோல்வியுருத ; தொழு-விலங்குகளை அடைக் கும் பெரிய கூடு) என்று இதனை உவமையால் பெறவைத்தமை காண்க. ஆடை, அணி முதலியன : இனி, அக்கால மக்கள் அணித்த ஆடை, அணி முதலியவற்றைக் காண்போம். மகனிச் மென்மை யான ஆடைகளே அணிந்திருந்தனர். இது,

  • கலவிக் களியின் மயக்கத்தால்

கலேபோய் அகலக் கலைமதியின் நிலவைத் துகிலென்(று) எடுத்துடுப்பீர்”* என்ற தாழிசையால் புலகுகின்றது. குழத்தை நடை பயின்று மழலை மொழியும் பருவத்தில் காப்புக் கடவுளாகிய திருமாலின் ஐம்படையாகிய திருவாழி, திருச்சங்கு, தண்டு, வாள், வில் என்னும் ஐந்தன் உருவைப் பொன்னுல் இயற்றி, அவற்றைக் கோத்து அணியும் வழக்கத்தையும் காண்கின்ருேம். குலோத் துங்கன் பிறந்து தனச்தடை பயின்றபொழுது,

  • தண்டுதனு வாள்பணிலம் நேமியெனும் நாமத்

தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே' (தனு-வில்; பணிலம்-சங்கு; நேமி-சக்கரம்; தன்-திருமாலின்; ஐம்படை-ஐம்படைத் தாலி) எனக் கூறப்பெறுவதனுல் இதனே அறியலாம். இ..து ஐம்படைத் தாலி எனக் குறிப்பிடப்பெறுவதால், இவ்வைத் துருவான் இயன்ற அணியைக் கோத்துக் கழுத்தில் அணிவதே மரபாகும் என்பது அறியக்கிடக்கின்றது. வண், பாடகம், விடுகம்பி, இரட்டைவாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகு வலயம், ஒற்றைச் சரடு, பல நிறமணிகள் கோத்த வன்னசரம், மணிமாலை, முத்து மாலை, பதக்கம், மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் முதலியவை மகளிரின் அணிகளாகத் திகழ்ந்தன. இவைகளைப் பேய்கள் அணிந்தவையாகக் கூறுகின்ருர் கவிஞர்.1 .


ميميwoمی-مبsیی:

122. தாழிசை-464. 124. தாழிசை.239, 123. தாழிசை-34. 125. தாழிசை-510-514.