பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 1 1 7 என்று காட்டுவதனுல் இதனே அறியலாம். இசையும், ஏனேய கலைகளும் ஏற்றம் பெற்றிருந்தன என்ற குறிப்பும் இதஞல் அறியப் பெறுகின்றது. இதனைத் தவிர, மக்கள் கோழிச் சண்டை, யானைப் போர், மற்போர், வாதப்போர் முதலியவற்றையும் பொழுது போக் காகக் கொண்டிருந்தனர்.

  • வருசெருவொன் றின்மையிஞன் மற்போரும் சொற்புலவோர் வாதப் போரும் இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா

ரணப்போரும் இணைய கண்டே' (செரு-போர் ; சிறை வாரணம்-கோழி; மதவாரணம். யானே ! என்ற தாழிசையால் இவை அறியப்பெறும். இக் காலத்தில் எங்கும் பெருவழக்காக இருக்கும் கவியரங்கம்’, 'பட்டி மன்றம்’ போன்ற நிகழ்ச்சிகளே இவற்துடன் ஒப்பிட்டு அறியலாம். இறுவாய் : இதுகாறும் கூறியவற்ருல் கலிங்கத்துப்பரணி" என்னும் அழகிய நூலே ஊன்றிப் பயிலுங்கால் சோழர்கால தாட்டுநிலை, மக்கள் வாழ்க்கை திலை, அவர்களிடம் நிலவின. பழக்க வழக்கங்கள் முதலிய செய்திகளை அறிகின்ருேம். அரசர் வழி வரலாற்றை மட்டிலும் அறிவது உண்மையான வரலாறு அன்று என்பதையும், தாட்டில் நடைபெறும் எல்லாச் செய்தி களும் அடங்கிய தொகுப்பே உண்மையான வரலாறு ஆகும் என்பதையும் தாம் உணர்தல் வேண்டும். கலிங்கத்துப் பரணி" இவற்றையெல்லாம் காட்டும் இலக்கியக் கண்ணுடியாக, வரலாற் றுக் கருவூலமாக, கலைச் செல்வமாகத் திகழ்கின்றது என்று கூறி அமைகின்றேன், வணக்கம். 131. தாழிசை-275.