பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 19 நாம் ஆழ்ந்து சித்தித்தால் சுவை” என்பது ஒரு புதிய கருத் தன்று என்பது தெளிவாகும். வண்ணப்படத்தில் வரையப் பெற்ற பன்றி ஒன்று சேற்றில் மூழ்கி வெளியேறிய தோற்றத்தை அப்படியே ஒவியர் காட்டுவதாக வைத்துக் கொள்வோம் அதைப் பார்க்கும் நாம் அதனேயே பன்முறை உற்று தோக்கி ஒரு வித இன்பத்தை அடைவோம் அல்லவா ? ஆயினும், பன்றி ஒன்று சேற்றில் புரண்டு எழுத்து சேறும் அழுக்குமாக நம் எதிரில் தோன்றினல் தாம் அக்காட்சியைக் கண்டு இன்பம் அடைகின் ருேமா ? இல்லையன்ருே ? சில சமயம் அக் காட்சியைக் காணச் சகியாமல் அருவுருப்புடன் முகத்தைக் கூட வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ளுகின்ருே மன்ருே ? அதுவும் சேற்று தாற்றமும் சேர்த்து வீசத் தொடங்கினுல் சொல்ல வேண்டியதில்லை. இதி விருத்து பெறப்படுவது என்ன ? கலே தமக்கு ஊட்டுவது ஓர் இன்ப உணர்ச்சியின் வினவு என்பதை நாம் அறிகின்ருே மன்ருே ? இதனையே இலக்கண நூலார் சுவை (ரலம்) என்று பெயரிட்டுள்ளனர். சுவையை ஒன்பது வகையாகப் பிரித்தும் காட்டியுள்ளனர் அவர்கள். இத்த ஒன்பதிலும் அவர்கன் எல்லா வித உணர்ச்சி விளேவுகாேயுமே அடக்கியிருப்பதுதான் வியப் பினும் வியப்பே யாகும். நம்மவர்கட்கு இதில் சிறிதேனும் சிரமம் இல்லை. ஏனெனில், இசையினே ஏழே சுரத்தின் சேர்க்கையாக உணர்த்திய அதிசயத்தை வேறு எந்த நாட்டில் காண முடியும் ? ஆயினும், அன்பர்களே, சுவையைப்பற்றிப் பேசுவதும் (எழுது வதும்) எளிதான செயலன்று என்பதை உங்கட்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். முதலில் கேட்போருக்குக் கருத்துக்களின் போக்கு சுவையாய் அமைதல் வேண்டும். ஆங்காங்கே சுவை களின் நுட்பங்களே விளக்கத் தகுந்த எடுத்துக்காட்டுக்கள் எளி தாகக் கிடைத்தல் வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக யான் கையாளும் மொழியும் தடையின் போக்கும் கேட்போரைப் பொருளினுள் இழுத்துச் செல்லுதல் வேண்டும். இன்றைய பொழிவில் கலிங்கத்துப்பரணி காட்டும் சுவைகளை உங்கட்கு எடுத்துக்காட்ட முன்வந்திருக்கின்றேன். நூலுக்குள் நுழைந்து சுவை காண்பதற்கு முன்னதாகச் சுவைகளைப்பற்றிய சில அடிப்படைக் கருத்துக்களே உங்கள் முன் வைக்க எண்ணு கின்றேன். இவைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நூலில் காட்டப்பெறும் நிகழ்ச்சியின் சுவைகளில் நன்கு ஈடுபட்டு அநுபவிக்க முடியும் என்று கருதுகின்றேன். சுவைகளின் நுட்ப மனைத்தும் கண்ணுலும் செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கே புலப்படும் என்றும், ஏனை