பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 பரணிப் பொழிவுகள் யோர்க்கு அஃது ஆராய்த்தறிதற்கரியது என்றும் தொல்காப்பி பதும் குறிப்பிட்டுள்ளார். ' கண்ணினும் செவியினும் திண்னிதின் உணரும் உணர்வுடை மாத்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.”* என்ற நூற்பாவில் அஃது அறியப்பெறும், கவை விளக்கம் : சுவை என்பது என்ன ? அது காணப்படு பொருளால் காண்பே சகத்தின் வருவதோர் விகாரம் என்பர் இனம்பூரணர். இருவகை நிலத்தின் இயல்வது சுவையே என்ற செவித்திய நூற்பாவினை எடுத்துக் காட்டி, உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் என்ற வேருெரு செயிற்றியது:ற்பாவால் விளக்குவர். ஈண்டு உய்ப்போன் என்றது நடிகன. நடிகன் செய்யும் அபிதயம் முதலியவற்ருல் அச்சுவை காண்போரிடம் உண்டாதல் கூடும். இதனை வேருெருவகையில் மேலும் விளக்க முயல்கின்றேன். இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன அறு சுவைகள்’ என்பதை நாம் அறிவோம். இவை தாவாகிய பொறி வழியே ஒருவரது உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகனாகும். இவ் வுணர்ச்சிகளேத் தரும் பொருள்கள் முறையே கரும்பு, வேம்பு, புளி, உப்பு, கடுக்காய், மிளகு போன்றவைகளாகும் என்பதை நாம் அறிவோம். இவை சுவைப் பொருள்கள்" என்று வழங்கப்பெறும், கரும்பினே நாவாகிய பொறி யால் சுவை உணருமிடத்து இனிப்புச் சுவையுணர்ச்சி தோன்று கின்றது. அங்ஙனம் தோன்றுங்கால் அது காரணமாக விருப்புத் தோன்றுகின்றது. இங்கணமே, வேம்பினைச் சுவைத்து உணருங் கால் கைப்புணர்ச்சி தோன்றுகின்றது என்பது நமக்குத் தெரியும், அது தோன்றுங்கால் வெறுப்புத் தோன்றுகின்றது என்பதையும் தாம் உணர்கின்ருேம். இங்ங்ணம் உள்ளத்தே தோன்றும் விருப்பு வெறுப்புக்களே உள்ளக் குறிப்புக்கள்’ என்று வழங்கப்பெறுகின்றன. இத்தகைய உள்ளக் குறிப்புக்களைக் கொண்டு இச்சுவையுணர்ச்சிகள் வெளிப்படுங்கால் முகமலர்ச்சி, முகச்சுளிப்பு முதலிய மெய்க்குறிகளைக் கொண்டு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்றன. இந்த மெய்க் குறிகளேயே விறல்' அல்லது 4. தொல், பொருள்-மெய்ப்-நூற். 27. 5. விறல், பத்து வகைப்படும்.அவை மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணின் வார்தல், நடுக்கமெய்தல், வியர்த்தல், தேற்றம், (தொடர்ச்சி அடுத்த பக்கம்)