பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 32 பரணிப் பொழிவுகள் " தகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப.’’ என்ற அவர் கூறும் நூற்பாவால் அறியலாம். இந்த எட்டுச் சுவைகளும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிப்பு, விறல் என்த வகைகளால் எண்ணுன்கு முப்பத்திரண்டு ஆகும் என்று உரையாசிரியர்கள் வினக்கியுள்ளனர். அவர்கள் கூறும் விளக் கத்தையும் உங்கட்குக் காட்ட விரும்புகின்றேன். இளம்பூரணர் கூறுவது : முதலில் இளம்பூரணர் கூறு வதைக் குறிப்பிடுகின்றேன். "பேயானும் புலியானும் கண்டா ஒெருவன் அஞ்சிய வழி, மயக்கமும், கரத்தலும், நடுக்கமும் வியர்ப்பும் உளவாகின்றே. அவற்றுள் அச்சத்திற் கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலந் தொட்டு நீங்கrது நின்ற அச்சம் சுவை. அதன் கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு. தடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் தடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்குப் புலனுவது என்று கொள்க : ஏனய மன நிகழ்ச்சி. பிறவும் அன்ன.’’ என்பது. பேராசிரியர் கூறுவது : அடுத்து, பேராசிரியர் கூறுவதையும் குறிப்பிடுகின்றேன்."சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துட் பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீைர் அரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறு பாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை எட் டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்து உறழ, முப்பத்திரண்டாம் என்பது. எனவே, சுவைப் பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலுமென நான்காயின. விறல் எனினும் சத்துவம் எனினும் ஒக்கும். பொறியுணர்வுகள் அவ்வச் சுவையெனப் படும்.” ஈண்டுக் காணும் முப்பத்திரண்டும் ஒருவகை. 7. தொல், பொருள். மெய்ப். 3. சுவையெனினும் மெய்ப் பாடெனினும் ஒக்கும். அச்சமுற்ருன்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினுற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனுகும் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின் கண் தோன்றலின் மெய்ப்பாடாயிற்று' (இளம்பூரணர்.)