பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 盖蛇岛 இனி, மற்குெரு வகையிலும் இச் சுவைகள் முப்பத்திரண் டாகிய வகையினேப்பெறும். அது வருமாறு : சுவைகள் சுவைதோன்றும் கிலக்களன்கள் (பொருள்கள்) 1. தகை எள்ளல், இளமை, பேதமை, மடன், 2. அழுகை இளிவு, இழவு, அசைவு, வறுமை, 3. இனிவரல் மூப்பு, பிணி, வகுத்தம், மென்மை. 4. மருட்கை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம். 5, அச்சம் அணங்கு, விலங்கு, கள்வர், இறை. 6. பெருமிதம் கல்வி, தறுகண், இளமை, கொடை. 7. வெகுளி உறுப்பறை, குடிகோள், அலே, கொலே. 8. உவகை செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு. இங்குக் காணும் முப்பத்திரண்டும் மற்ருெரு வகை சுவைகளின் தோற்றம் : இனி, சுவைகளின் தோற்றத்தைப் பற்றியும் ஈண்டு விளக்க முற்படுகின்றேன். சுவைகளின் தோற்றத்தினேயும் அவற்றின் தொகையினேயும் தொல்காப்பியர்,

  • பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளும்

கண்ணிய புறனே நாளுன்கு என்ப" (பண்ணே-விளையாட்டு ஆயம்) என்ற நூற்பாவால் குறிப்பிடுவர், மெய்ப்பாடு என்பது பண்ணை’ என்பதன் வழியாகத் தோன்றும் (பண்ணினையுடையது “பண்ணே'); அவை முப்பத்திரண்டு பொருளாம். அவற்ருல் கருதப்பெறும் பொருட்பகுதி பதினருக அடங்கும் என்பது இந் நூற்பாவில் குறிக்கப்பெறும் பொருட்சுருக்கமாகும், இது நாடக வியலார் கொள்கை என்பதும், தொல்காப்பியர் இக்கொள்கை யினை முதலில் எடுத்துக்காட்டி மேலே தம் கொள்கையினேக் கூறுகின்ருள் என்பதும் உரையாசிரியர்களின் கருத்தாகும், இக் கருத்தின டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் மறுத்திடுவர்.' 8. இவை மெய்ப். நூற் 4 முதல் 11 முடிய உள்ள நூற்பாக் களில் கூறப்பெற்றவை. 9. மெய்ப்-நூற். 1 10. அவர் உரை நோக்கி அறிக. ச. சோ. பாரதியார். மெய்ப்பாட்டியல் உரை. பக். 221.