பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் இனம்பூரணர் கூறுவது முதலில் இளம்பூரணர் இத் தொகைபற்றிக் கூறுவதை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். இங்குக் கூறிய பண்னே என்பது விளையாட்டு; இ.".து ஆகுபெயராகி விளையாடும் ஆயத்திக்னக் குறிக்கும்; இந்த ஆயம் கற்று வல்ல வராய் நல்லொழுக்கம் மேற்கொண்ட அறிவுடையார் கூட்டம் அன்று இந்த ஆயத்தாரிடைத் தோன்றுவனவாய், மேற் கூறி யாங்கு சுவை தோன்றும் எள்ளல் முதல் விளையாட்டு ஈருக வுள்ள (இரண்டாம் வகை) முப்பத்திரண்டு பொருள்களின் புறத்தே தோன்றுவனவாய் உள்ளன. பதினறு மெய்ப்பாடுகள் ; அவை சுவை எட்டு, சுவைகளின் குறிப்பு எட்டு எனப் பதிை இகும்” என்பது. பேராசிரியர் கூறுவது அடுத்து, பேராசிரியர் கூறுவதைக் குறிப்பிடுகின்றேன். பண்ணை என்பது முடியுடை வேந்தரும் குதுதில மன்னரும் முதலாயிளுேர், நாடக மகளிர் ஆடலும் பாட லும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு. அதனேக் கூறும் நாடக வழக்கிற்கு உரிய பகுதிகள் முற்கூறி யாங்கு பொருள், சுவை, குறிப்பு, விறல் என்ற நான்கு வகை களால் ஆன முப்பத்திரண்டு (முதல் வகை) ஆகும். வேம்பு முதலாயின பொருளும் அதனோடு நா முதலாயின பொறியும் வேறு வேறு நின்றவழிச் சுவை என்று சொல்வதே பிறவாமை யாலும், இவ்விரண்டும் கூடியவழிச் சுவை என்பது பிறத்த லானும் அவை பதினுறும் எட்டு எனப்படும். இனிக் குறிப்பும் சத்துவமும் என்பனவும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறு பாடும் என்பராதலின் அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவமாகலின் அவை பதினறும் எட்டாய் அடங்குமாகலின் அவை ஈரெட்டுப் பதினருகும்” என்பது. எனவே, இவ்விரு உரையாசிரியர்களும் ஈண்டுக் கூறிய பண்ணை என்பது இன்னது, முப்பத்திரண்டு ஆவன இன்னவை என்பதில் பெரிதும் கருத்து மாறுபடினும் அவை பதினருக முடியும் பொருள் இன்னவை என்பதில் ஒன்றிய கருத்தினராக உள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும். சுவைபற்றிய வடநூலார் கொள்கை : இவ்விடத்தில் சுவை களின் இயல்பினையும், அவை உண்டாகும் முறையினையும் அவற் றின் வகைகளையும்பற்றி வடமொழி இலக்கண நூலாரின் கருத்துக் களையும் குறிப்பிட விரும்புகின்றேன். சுவைகளின் இயல்பும் அவை உண்டாகும் முறையும் : முதலில் சுவைகளின் இயல்பினையும் அவை உண்டாகும் முறையினேயும்