பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் i £5 தோக்குவோம். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உளவேறுபாடு பாவம் எனப்படும். பாவங்களுள் சில நிலைபெற் றிகுக்கும் ; பல சிறிது நேரம் நின்து மறையும். தனக்கு ஒற்றுமை யுடையனவும், வேற்றுமையுடையனவுமான பிற பாவங்களால் கேடுருமல்: ரசமாகிச் (சுவை) சமையும் அளவும் நிலைநிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் (திலேயான பாவம்) எனப்படும். அது காதல், சோகம் முதலாக ஒன்பது வகைப்படும், அதனைப் பின்னர் விளக்குவேன். உலகியலில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும், காசியமாயும், துணைக்காரணமாயும் இருப்பவை கவிஞனின் வாக்கிலும் நடிகனின் அபிநயத்திலும் அறிவிக்கப்படும் போது முறையே விட வம் (நன்கு தோன்றச் செய்வது) என்றும், அனுபாவம் (விபாவத்துடன் இயைந்துள்ளது) என்றும். சஞ்சாரி பாவம்(துணை செய்யும் உணர்வுகள்-இது நிலைபேரில்லாத பாவம்) என்றும் வழங்கப்பெறும். அ..தாவது : காரணம்-விபாவம் காரியம்-அனுபாவம் துணைக் காரியம்-சஞ்சாரி பாவம் என்று வழங்கும். இந்த விபாவ அனுபாவங்களால் வெளிப்படு கின்ற ஸ்தாயி பாவமே “ரளலம் அல்லது 'சுவை” என்று பெயர் பெறும். மேற்கூறிய விபாவம் இரு வகைப்படும். அவை ஆலம்பன விபாவம்' என்றும், உத்திபன வியாவம்' என்றும் பெயர் 11. ஒற்றுமையுடைய பாவத்தால் கேடுருமல் நிலைபெறுத லாவது : ஒர் அழகிய மாதினேக் கண்டு அவளிடம் காதல் கொண்டாளுெருவன், பின்னர் அவளேவிட அழகினையுடைய வேருெரு மாதினேக் காணும்போது பின்னவள் பால் காதல் செலுத்தாமல், முன்னேய மாதின் நிகணவுண்டாகி, அவள் பால் காதல் கொள்வது. வேற்றுமையுடைய பாவத்தால் கேடுருமல் நிலைபெறுதலாவது : ஒரு மகள் பால் காதலித்தான் ஒருவன் பின்னர் இளமகள் ஒருத்தியின் சாவு, பிரிவு முதலியவற்றைக் கண்டவிடத்தும், காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையட என்றவாறு அவற்ருல் சோகமும் வெறுப்பும் உண்டாகி, முன்காதலிக்கப்பெற்றவளிடத்து முன்னேய காதல் கெடாதிருப்பது, 12. ஆலம்பன விபாவம் ஆலம்பனம் - பற்றுக் கோடு; விபாவம்-தூண்டல்; அதாவது, பற்றுக்கோடாய தூண்டல், 13. உத்திபன விபாவம் , உத்திபனம்-கிளர்த்தல்; விபாவம்தூண்டல்; அதாவது, கிளர்த்தும் தூண்டல்,