f :23 பரணிப் பொழிவுகள் கனப் பெறும். ஒருவரின் காதல் முதலிய உள்ள நிகழ்ச்சிக்கு எப்பொருளின் சார்பு காரணமோ அப்பொருள் அதற்கு ஆலம் பணம் எனப்படும். எவ்வாறெனின், தலைவியின் உள்ளத்துள்ள காதலுக்குத் தலைவனும், தலைவனுள்ளத்துள்ள காதலுக்குத் தலைவியும் ஆலம்பன விபாவம் ஆகும். அங்ங்னமே, தலைவி யுள்ளத்துள்ள சோகத்திற்குத் தலைவன் மரணமும், தலைவ லுன்னத்துள்ள சோகத்திற்குத் தலைவியின் மரணமும் ஆலம்பன Eபாவம் ஆகும் என அறிதல் வேண்டும். மேற்கூறியவாறு தோன்றிய காதல் முதலியவற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்திபன விபாவம் எனப்படும். அவர்களுடைய உருவின் சிறப்பு குணநலன் செயல் அணிகலன் முதலியனவும், தென்றல் நிலா கடலொலி முதலியனவும் உத்தீபன விபாவம் ஆகும். இவற்றையே தொல்காப்பியர் செல்வம், புலன், புணர்வு, வின் பாட்டு முதலியனவாகக் குறிப்பிடுகின்ருர், ! இனி, காரியமாகிய அனுபாவமும் இரண்டு வகைப்படும். ஒன்று, அகத்தது; மற்றென்று, புறத்தது. அந்தக்கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற் பிரிவிற் குரியவை: அவை சாத்விக பாவம் எனப்படும். கடைக்கண் நோக்குதல் முதலிய செய்கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந் தவை. காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக்காரண மாய் தின்று வளர்க்கின்ற நலிவு, நினைவு, விரைவு முதலியன சஞ்சாரி பாவம் எனப்படும்; இதனை வியபிசாரி பாவம் என்று கூறுதலும் உண்டு. இஃது அரசனைப் பின் தொடரும் ஏவலர் போலவும், கடலில் பிறக்கும் அலைகள் போலவும் ஸ்தாயி பாவங் களைப் புலப்படுத்தி நிற்கும். தொல்காப்பியர் கூறும் புதுமுகம் புரிதல் முதலியனவும், கூழைவிரித்தல் முதலியனவும்! அனு பாவம் என்ற வகையினுள் அடங்கும். 14. மெய்ப்-நூற். 3 முதல் 11 முடிய நந்நான்காகப் பிரித்துக் கூறியவை. ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறும் முதற் பொருளும் கருப்பொருளும் உத்தீபன விபாவம் ஆகும். இவை வரும் சங்கப் பாடல்களே நோக்கி இதனை அறியலாம். 15. இது எட்டுவகைப்படும் : 1-ஸ்தம்பம்-செயலற்று நிற்றல்; 2. பிரளயம்-மூர்ச்சித்தல் , 3. ரோமாஞ்சம்-மயிர்க்கூச்செறிதல் ; 4. சுவேதம்-வியர்த்தல்; 5. வை.வர்ண்யம்-நிற மாற்றம், 6. வேபது. உடல் தடுக்கம்; 7. அஸ்ரு.கண்ணிர் உகுத்தல், 8. வைஸ்வர்யம். குரல் மாறுபாடு. (5-வது அடிக் குறிப்புடன் ஒப்பிடுக.) 16. மெய்ப்-நூற். 13. 17. மெய்ப்-நூற். 14.
பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/133
Appearance