பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 137 ஒரு நாடகம் தடிக்கும்போது அவையிலுள்ளோர் தலைவன் தலைவியரின் செயல்கள் யாவற்றையும் கண்டுகளித்து மெய்ம் மதத்து ஆனந்தக் கண்ணிம் பெருக்குவர். அதற்குக் காரணம், அவையோள் அந்நடிப்பில் உண்டான சுவையை உணர்ந்ததனுல் ஆகும் என்பது அறியத் தக்கது. அவ்வாறே கவிஞன் ஒருவன் தன் காவியத்தில் தலைவன் தல்வியரை வருணிக்க, அவற்றை உணர்த்து படிப்போர் சுவையை உட்கொண்டு மகிழ்வர். ஆதலின், சுவையை அநுபவிக்க வியாவம் அனுபாவம் முதலியன இன்றியமையாதவை என்பது பெறப்படுகின்றது. இவ்வாறு தோன்றி, தெளிவாகி, வளர்ந்து வருகின்ற காதல் முதலாகிய பாவங்கட்கு நல்லறிஞர் உள்ளத்தில் உண்டாகும் பிரதிபிம்பமே ரஸம் அல்லது சுவை எனப்படும் என்று கொள்ளல் வேண்டும். துரய வெண்ணிறத்தனவாகிய ஞாயிற்றின் கதிர்கள் செத்திறக் கண்ணுடியில் படும்போது அவற்றிற்குச் செந்நிறம் உண்டாதல் போன்று, காரணம் முதலியவற்றிற்கும் காதல் முதலியவற்றிற்கும் பிரதி பலிக்கச் செய்யும் பொருளின் தன்மையை அனுசரித்துச் சில சிறப்பான வேறுபாடுகள் உண்டாகின்றன, அதனுல் காரணம் முதலியவை விபாவம் முதலாய நிலையில் இன்ன மனிதர், இன்ன தேரம், இன்ன இடம் இவை போன்ற சிறப்பியல்புகளை விட்டுப் பொதுவாய வடிவில் அமைகின்றன. அவ்வாறே ஸ்தாயி பாவங்களுள் சோகம், இளி வரல் முதலிய மாறுபட்ட உள வேறுபாடுகளும் அனுகூல பாவங் களாக அமைகின்றன. அதனுலே, கருணம் (சோகத்தால் உண்டாவது), பீபத்லம் (இழிவரலால் உண்டாவது) முதலிய ரஸங்களிலும் (சுவைகளிலும்) நமக்குச் சுவையும் ஈடுபாடும் உண்டாகின்றன. மகா கவி நீலகண்ட தீட்சிதர் "நிர்வேதம் (விரக்தி), பயம், சோகம், ஜூகுப்ஸை (அருவருப்பு) முதலியவை களும் இலக்கியங்களில் ரஸ்த் தன்மையன ஆகின்றன” என்று கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது. நல்லறிவாளன் தன் தூய உள்ளத்தில் இந்த விபாவம் முதலியவைகளை மீட்டும் மீட்டும் நினைக்கும் செயலுக்குச் சுவைத் தல் (சர்வனம்) என்று பெயர். அவ்வாறு சுவைக்கும் நிலையில் கரும்பின் துண்டிலிருந்து இனிப்புச் சுவை உண்டாதல் போன்று விபாவம் முதலியவற்றிலிருந்து சிருங்காரம் முதலிய ரஸங்கள்’ தோன்றுகின்றன. காதல் முதலிய உளவேறுபாடுகள் நல்லறி