பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 பரணிப் பொழிவுகள் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. உள்ளம் உளிைர்ச்சி ததும்பிப் பூரித்து நிற்கும் நிலையில் இன்பம் பிறக்கும் என்பதற்கு வால்மீகிமுனிவரின் நிலை சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அப்பொழுதுதான் இராமாயணத்தின் மூலசுலோகமும் பிறந்ததாக வரலாறு. அந்த வரலாறு இதுதான் : மிதுனங்களான கிரவுஞ்சப் பறவைகளுள் பெண் பறவையின் பிரிவு தனக்கு உண்டாகுமோ என்று எப் பொழுதும் அஞ்சும் தன்மையையுடைய ஆண் பறவையை வேடன் அடித்துக் கீழே தள்ளிவிட்டான். அது குருதியில் தோய்ந்து மண்ணில் பரிதவிக்கும் நிலே கல் நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. இந்நிலையைப் பெண் பறவை கண்ணுற்றது. அச்சிறு உள்ளம் அத்துயரத்தை எவ்வாறு தாங்கும் ? அது தன் துணேவனின் பிரிவினைத் தாங்க முடியாமல் கதறியது. துடித்துத் தவித்துப் புலம்பும் காட்சியை முனிவர் கண்டார். துக்கத்தால் மனம் நிரம்பி அசைவற்று நின்றது. சோகம் அவ ை ஆட்கொண்டு விட்டது. அந்நிலையில் அவரது ஆன்மா பளிச் சென்று தெரிந்தது. உடனே துன்ப வேகமெல்லாம் இன் பப் பெருக்காய் மாறிவிட்டது. அது கருண ஸ்மாய்ப் பரிணமித்தது. அந்நிலையில் முனிவர் தம்மை மறந்து நின் ருர். பிறகு விழித்துக் கொண்ட பொழுது, மனத்துண்டான சோகம் ஒரு சுலோகமாக அளவற்ற இன்பத்தின் மணம் கமழ, வெளிக்கிளம்பி வந்தது. அதுவே கவிதா தேவியின் அருளுேதயம். சுலோகத்தின் பொருள் இது : "வேடனே, மிதுனங்களான கிரவுஞ்சப் பறவை களுள் காமமோகங் கொண்ட ஆணினே க் கொன் றமையால் பல நாள் இவ்வுலகில் நீ நிலேத்திராய்' என்பது. இங்கு அடித்துக் கொல்லப்பெற்ற ஆண் பறவை ஆலம்பன வியா வம் ; பெண் பறவையின் கதறுகை உத்திபன விபாவம்; சோகம் ஸ்தாயி பாவம்: உணரப்படும் சுவை கருணம்’ ஆகும். முனிவர் துக்க கரமான நிகழ்ச்சியை ஏற்றிருப்பாராயின் அவர் வாயினின்று கவிதை வெளிவராது ன்பது திண்ணம். கவிதை ஆனந்தக் களிப்பக.ந்த உள்ள த்திலே உருவெடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். ரஸங்களின் பரிருமம் : பங்களின் பரிதுமத்தைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதைப் பற்றியும் குறிப்பிட விரும்புகின்றேன். மேற்கூறிய ஒன்பது சுவை களுள் கருணம் ஒன்றுதான் பல்வேறு ரஸங்களாகப் பரிணமிக் கின்றது என்பர் ஒருசாரர். அவர் கூறுவது: கருணம் ஒன்றுமே உலகின் அடிப்படை உண்மை நிலேயில் அடங்கிக் கிடக்கின்றது. ஆன்மாவும் உலகும் பின்னிக் கிடக்கின்றது. ஆன்மாவின் கூறு இன்பமாகவும், உலகின் கூறு துன்பமாகவும் உள்ளன.