பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் I E}基 மனத்தின் உருக்கம் மட்டிலும் இல்லாவிடில் அங்கு ரஸ்த்திற்கே இடம் இல்லே. உருக்கம் கருணத்தில்தான் தலையெடுக்கும்; ஆதலின் கருணமே சிறந்த ரஸம், ஆகவே, ஏதாவது ரஸம் நமது அதுபவத்தில் தோற்றமளிக்க வேண்டுமாகில் நம் மனம் உருக வேண்டும். மனத்தை உருக்க வைக்கும் சாதனத்தையே கருணத் தின் உறுப்பாக தாம் ஏற்கின்ருேம். ஆகவே, கருணம் ஒன்று தான் ரஸம் என்றும், அது பற்பல காரணங்களின் சேர்க்கையால் பல்வேறு ரஸங்களாகக் காட்சி அளிக்கலாம் என்றும் பவபூதி என்னும் வடமொழிக் கவிஞர் தம் உத்தர ராம சரிதம்' என்னும் நாடகத்தில் குறிப்பிடுவர். மற்ருெரு சாரார் சிருங்காரம்: ஒன்றே சிறந்தது என்றும், அதிலிருந்தே ஏனையவை தோன்றின என்றும் கூறுவர். இலக்கியத்தில் இதுவே முதல் ரஸ்மாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இலக்கியங்களேயும் இதுவே அதிக மாக ஆட்கொண்டுள்ளது. அதன் காரணமாகவே அது ரஸங் ஆளின் மன்னன்' என்றும் வழங்கப்பெறுகின்றது என்று வாதி டுவர். இன்னும் சிலர் மிக துணுக்கமாய் ஆய்ந்து சிருங்காரம் ஒன்றுதான் ரஸ்ம் என்றும், மற்றவை அதன் வேற்றுருவங்களே என்றும், ஊன்றிக் கவனித்தால் அதுவே எல்லா ரவலத்திலும் அடிப்படையாய்க் கிடப்பதை எவரும் எளிதாக உணரலாம் என்றும் கூறுவர். 'சிருங்கார சர்வஸ்வம்’ என்ற நூலின் ஆசிரியர் இப்படியே ஆய்ந்து வெளியிட்டுள்ளார். பிறிதொரு சாரார் அற்புத ரஸ்த்திற்கு முதலிடம் தந்து அதிலிருந்துதான் ஏனேயவை தோன்றுகின்றன என்று பகர்வர். இங்ங்னம் அறிஞர்கள் 'ரலம் ஒன்றுதான், பல அன்று’ என்று நம்ப வைக்க அரும்பாடு பட்டுள்ளதை நாம் அறிகின்ருேம். இதில் உண்மை இல்லாமல் இல்லே. பல வகையான நீர்களில் தோன்றும் பகலவனின் பிம்பம்போல் பல விதமான நிலைகளில் தோன்றும் ஆன்ம ஒளியாகிய ரஸ்த்திற்கும் வேற்றுமை இல்லே. உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரித்திருக்கும்பொழுது அதில் தோன்றும் ஒளிக்கு வேற்றுமை இல்லே. அதுபவ நிலையை வைத்துப் பார்த் தால் ரஸத்திற்கு வேற்றுமை இல்லாமை புலணுகும். ஒற்றுமையில் வேற்றுமை : சுவைகளுக்குக் காரணமாக இருக் கும் உணர்ச்சிகள் ஒன்பதாக வகுக்கப்பெற்றுள்ளதை மேலே கூறினுேம் அல்லவா ? ஓர் உணர்ச்சியில் பிற உணர்ச்சிகள் கலக்காமல் இருப்பது அரிது; பிறஉணர்ச்சிகளின் கூறுகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. பூமியை எடுத்துக் கொண்டால் அதில் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் நான்கும் கலந்து தான் இருக்கும். மற்றவை இருந்தபோதிலும் பூமியின் கூறு அதில் அதிகமாக இருப்பதால் அதனைப் பூமி என்று வழங்கு