பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳢器2 பரணிப் பொழிவுகள் கின்ருேம். அவ்விதமே. நாம் சுவைகளின் வேறுபாட்டை உணர வேண்டும். பல இடையூறுகள் இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கமாகத் துஷ்யந் தஜனயே தாடிய சகுந்தலையின் மன உறுதியை வீரத்தின் கூருகக் கொள்ளலாம், ஆளுல், கவிஞன் அதைக் காதலின் கூருகக் இகாண்டுள்ளான். அவ்வாறே சிறை இருந்த செல்வியின் மன உறுதியை வீரமாகக் கொள்ளளாமேனும், காதலாகக் கொள்வதே மரபு. இவ்வாறே, இசைக் கலையிலுள்ள ஏழு சுரங்கள் ஒவ் இவான்றிலும் மற்ற ஆறு சுரங்கள் கலந்திருப்பது நமக்குத் தெரி யாவிட்டாலும் இசையறிஞர்கள் அறிந்து நமக்கும் எடுத்துக் காட்டுவர். கதிரவன் ஒளியிலுள்ள வெண்மை நிறத்தில் ஏழு திறங்கன் கலந்திருப்பதை பெளதிக அறிஞர்கள் எடுத்துக் காட்டி புள்ளனர். எனவே, எதனையும் ஆராய்ந்து பார்ப்பவர்கட்கு ஒற்றுமையும் தோன்றும்; வேற்றுமையும் புலனுகும். சுவைகளின் அடிப்படையாகவுள்ள உணர்ச்சிகளே ஆராயும்போது ஒற்று மையும் காணப்பெறும்; வேற்றுமையும் காட்சி அளிக்கும். வேற்று ழையைக் கொண்டுதான் உணர்ச்சிகள் ஒன்பதாகப் பிரிக்கப் பெற்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். மேற்கூறப்பெற்ற ஒன்பது பாவங்களும் எல்லா உயிர்க விடத்தும் பற்றியிருக்கும். ஆணுல், சிலருடைய மனே விருத் திகள் பல பிறப்புக்களிலுள்ள வாஸ்னே மிகுதியால் சில பாவங் ஆனால் மிக்குச் செல்லும்; சிலவற்றில் குறைந்து காணப்பெறும். ஆதளுல் இவை அறவே இல்லாதிருக்கும் என்று எண்ணுதல் ஆடாது. வீரத்திற்குக் காரணமாகவுள்ள உற்சாகம், பயானகத் திற்குக் காரணமாகிய அச்சம், ரெளத்திரத்திற்குக் காரணமாகிய குரோதம் ஆகியவை எல்லா உயிர்களிடத்தும் மிகுதியாகக் காணப்பெருமைக்குக் காரணம் வழிவழி வரும் வாஸ்னேகளின் குறைவே என்று கருதவேண்டும். சிருங்காரத்திற்குக் காரணமாகிய காதல் எல்லா உயிர்களிடத்தும் மிக்குக் காணப்படுவதற்குக் காரணம், வழிவழி வரும் வாஸ்னேயின் மிகுதியே என்று கொள்ள வேண்டும். ஆதலின், இவ்வெல்லாச் சுவைகளேயும் எல்லா உயிர்களும் ஒரே பிறப்பில் அநுபவித்தல் அரிதாக உள்ளது. இன்னும் ஒரு சிலர் பக்தி,வாத்சல்யம் முதலியவற்றையும் சுவை களாகக் கருதுகின்றனர். ஜகந்தாத பண்டிதர் என்ற அறிஞர் பக்தியை மிகவும் பெருமைப் படுத்திப் பேசுகின்ருர், கிருஷ்ளு’ என்ற இரண்டு எழுத்துக்களின்'" இனிமையைக் கண்ட 19. வடமொழியில் 'க்ரு ஒர் எழுத்தாகவும் 'ஸ்ணு மற் ருேர் எழுத்தாகவும் அமையும்.