பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 33 துண்டா ?' என்று வினவுகின் மூச். பக்தி என்பது சிறந்த ஏலம் அல்லது மகுேநிலை. அதற்கு உறுப்பாகவே மற்ற தலங்கள் திற் கின்றன என்று ஜயதேவர், லீலாசுகர் முதலிய மாமுனிவர்களாகிய கவிஞர்கள் காவியம் எழுதி மெய்ப்பித்துள்ளனர். இவர்களிடம் ஈடுபட்டோர் சிறிது மனமிரங்கி பத்தாவது உணர்ச்சியாகப் பக்தியை ஏன் கொள்ளக் கூடாது?’ என்று பிடிவாத மும் செய் வர், இலக்கண ஆசிரியர்கள் நன்கு ஆய்ந்து பக்தி, வாத்சல்யம் போன்றவற்றை பாவமே என்று அறுதியிட்டுள்ளனர். 'பக்தி ரஸ்ம்' என்று வழங்குவது உபசாரமேயன்றிக் காப்பியச் சுவை பற்றிச் சிறந்த நூல்களில் வழங்குதல் இல்லை. பக்திச் சுவை தனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ !' என்று சேக்கிழார் பெருமானப் புலவர்கள் குறிப்பிடுவதையும் உபசார வழக்காகவே கொள்ளுதல் வேண்டும், பக்தி என்ற பாவம் சிருங்காரத்தில் அடங்கும். பகவானிடத்தில் செலுத்தும் அன்பு, பக்தி; குழந்தை களிடம் செலுத்தும் அன்பு, வாத்சல்யம்; மனேவியிடத்தில் செலுத்தும் அன்பு, காதல். இவ்வாறு அன்பு இட வேறுபாட்டிற் கேற்பப் புதுப் பெயர்களைப் பெறுகின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இப் பாவங்கள் யாவும் சிருங்காரச் சுவையுள் அடங்கும். உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று : இவ்விடத்தில் ஒரு முக்கிய உண்மையை மனத்திலிருத்துதல் வேண்டும். உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தை ரஸம் என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம், ஒரு சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. உலகியற் செயல்களுள் நகை,காதல் போன்றவற்றில் இன்பம் உண்டா தல் போல் அழுகை, இழிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உளதாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்தஉண்மை யாகும். இதனுல்தான் சுவை இலக்கண நூலார் உலகியலின் பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத்தி லாவது அச்செயல் நிகழும்பொழுது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் வியாவம் முதலிய வற்ருல் உண்டாகும் சுவையையே'ரஸம்’ என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் இளமகன் இறந்ததைக்குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயரம் உண்டாகின்றது. ஆளுல், மேக நாதன் இறந்துபட்டபோது இராவணன், மண்டோதரி புலம்பு வதாக உள்ள பாக்களைப் படிக்கக் கேட்குமிடத்து அளவிலா மகிழ்ச்சியுண்டாகின்றது. அவலத்திலும் இனபத்தைக் காண்ட 20. சேக்கிழார் பிள்ளைத் தமிழ் . தாலப் பருவம்-8,