பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 重莎筑 காணு தரற்றும் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே.' (ஊன்.உணவு , ஆதரிக்கும்-ஆசைப்படும்: கலம்பாத்திரம்; அரற்றல்-கதறியழல்) என்ற தாழிசையில் காட்டப்பெறுகின்றது. ஒர் ஊமைப் பேயின் திசிவ இது :

  • பையாப் போடு பசிகாட்டிப்

பதலே நிறைந்த கூழ்காட்டிக் கையால் உரைக்கும் ஊமைப்பேய் கைக்கே கூழை வாரீரே.”* (பையாப்பு-துன்பம்; பதலே-பானே : சூல் கொண்டுள்ள ஒரு பேய் பசியால் செவிகளடைத்துப் போகின்றது. கூழைக் கண்டதும் காதடைப்பு நீங்குகின்றது ; தாக்கைத் துழாவிக்கொண்டு உண்ணுவதற்கும் தயாராகின்றது. இதனேக் கவிஞர்,

  • அடைத்த செவிகள் திறந்தனவால்

அடியேற் கென்று கடைவாயைத் துடைத்து நக்கிச் சுவைகாணும் சூற்பேய்க்கு இன்னும் சொரியிரே..”* சூல்-கருப்பம்; சொரியீர்-வாருங்கள் : என்று காட்டுகின்றர். பேய்களிலும் குறைமதியுள்ளவை இருக்கும் போலும் ஒரு பேய் ஓட்டைக் கலத்தில் கூழ் பெற்று உண்ணுகின்றது. கூழ் ஒழுகும் நிலையைப் பார்க்கக் கலத்தைக் கவிழ்த்துப் பார்க் கின்றது அப் பேய். கூழ் முழுவதும் கொட்டிப் போகின்றது :

  • பொல்லா ஒட்டைக் கலத்துக்கூழ்

புறத்தே ஒழுக மறித்துப்பார்த்(து) எல்லாங் கவிழ்ந்து திகைத்திருக்கும் இழுதைப் பேய்க்கு வாரிரே..”* (பொல்லா-கெட்ட மறித்துப் பார்த்து-தலைகீழாகத் திருப்பி; இழுதை-அறிவற்ற) என்பது கவிஞரின் சொல்லோவியம். 21. தாழிசை-569. 23. தாழிசை-571. 22. தாழிசை.570. 24. தாழிசை-572.