பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 பரணிப் பொழிவுகள் ஒரு பேய்க்கு உண் கலம் கிடைக்கவில்லை. அது போர்க் களத்தில் இறந்து கிடந்த யானைத் துதிக்கையின் ஒரு நுனியை பல்லின்மேல் நிறுத்திக் கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும் படி வேண்டுகின்றது.

  • துதிக்கைத் துணியைப் பல்லின் மேல்

செவ்வே நிறுத்தித் துதிக்கையின் துதிக்கே கூழை வாரென்னும் நோக்கப் பேய்க்கு வாரீரே.”* (துணி-துண்டம், செவ்வே-செவ்வையாய்; துதி-துணி) என்ற தாழிசையால் இப்பேயின் நிலையினைக் கண்டு நகைத்து மகிழலாம். * * * * *::. . . அழுகைச் சுவை: கலிங்கப் போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சி கள் பல அழுகைச் சுவை பயப்பவையாகும். துன்பத்திலும் இன்பத்தைக் காண்பதுதான் ஆன்மாவை உணர்வதாகும் என்று கூறுவர். இக்கட்டத்தில் சில தாழிசைகளைப் படித்ததுபவித்து நம் உள்ளம் துக்க உணர்ச்சியால் பூரிக்கவே அழுகை, சுவையாக மலர்கின்றது; கருண ரஸ்மாகின்றது. இச் சுவையை மேல் நாட்டார்போல் தம் நாட்டார் இறுதி வரையில் வளர்த்துக்காட்ட முஇனவதில்லை. கலிங்கப் போர் முடிந்தபின் திரும்பி வாராத தன் கொழுந&னத் தேடிக்கொண்டு போர்க்களத்திற்கு வருகின் ருன் மங்கையொருத்தி. அங்குத் தன் கணவனின் உடல், முகம் வேறு வேருகவும் கை, கால் வேறு வேருகவும். துண்டுபட்டுக் கிடப்பதைப் காண்கின்ருள். கொழுநனின் தலைமட்டும் அவள் கைக்குக் கிடைக்கின்றது; ஏனைய உறுப்புக்களை நரிகள் இழுத்துச் சென்றன போலும் !

  • பொருதடக்கை வாளெங்கே மணிமார்பு எங்கே?

போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோள்.எங்கே ? எங்கே என்று பயிரவியைக் கேட்பாளேக் காண்மின் காண்மின்.” 8 (மணி.அழகிய, வயிரம்-அழுத்தமானது; பயிரவி.யோகினி (காளியின் பரிவார மகளிர்)) என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். 25. தாழிசை-573, 26. தாழிசை-484,