பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 37 இன்ைெருத்தி தன் கணவன் முகத்தைக் கண்ட பிறகு தன் உயிரைத் துறக்க விரும்புகின்ருள். போர்க்களத்திக்கு வந்து சாதகரையும் இடாகினியையும் அவ்வுடலைக் காட்டுமாறு வேண்டுகின்ருள்.

  • தங்கணவர் உடல்தாமும் போக என்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார் எங்கணவர் கிடந்தஇடம் எங்கே என்றென்(று) இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.' (சாதகர் - காளியின் மெய்காப்பாளர்; இடாகினி சுடலைப் பிணம் தின்னும் பேய்) என்பது அவள் நிலையைக் காட்டும் சொல்லோவியம். போர்க்களம் புக்க மகள் ஒருத்தி தன் கேள்வனின் உடலேக் காண்கின்ருள் ; வாய் மடிந்த நிலையில் காணப்படுகின்றது. பேசாத அவனைப் பார்த்து உதடுகளில் காயம் பட்டதோ?’ என வினவுகின்ளுள். உடனே வெறுப்புமிக்கு அங்கேயே தன் உயிரை விடுகின்ருள். ' வாய்மடித்துக் கிடந்ததலை மகனே நோக்கி மணியதரத் தேதேனும் வடுவுண் டாயோ? நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து நின்ருவி சோர்வா8ளக் காண்மின் காண்மின்.”* (தலைமகன்-கணவன் ; மணி-அழகிய ; அதரம்-உதடு ; கூர்தல்-மிகுதல்; ஆவி-உயிர்) சிறந்த வீரனை தன் கொழுநன் வெற்றியுடன் மீளாமை கருதி அவன் மனைவி வெறுப்புற்று உயிர் துறக்கும் காட்சி இது. தன் கொழுநனத் தழுவிய வண்ணம் அவனுடனே தன் உயிரையும் துறக்கும் தங்கையொருத்தியைக் காண்கின்ருேம். இவள் குற்றுயிராகத் தரைமீது கிடக்கும் தன் கொழு நனைக் காண்கின்ருள். தரை மகளும் ஒரு பெண்ணுகலின், அந்நிலமகள் தன் கணவனைத் தாங்கலாக தெனக் கருது கின்ருள்; உடனே அவன் உடலைத் தன் மடியின்மீது கிடத்திக் கொள்ளுகின்ருள், விண்ணுடு செல்லும் அவன் உயிர் அங்குள்ள அர மகளிரைத் தழுவக்கூடும் என்று கருதி 27. தாழிசை-481. 28. தாழிசை-482.