பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 பரணிப் பொழிவுகள் அவன் உயிர் போகும்போதே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகின்ருள், தரைமகள் தன் கொழுநன்றன் உடலந் தன்னைத் தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணுட்(டு) அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க விடுவாளேக் காண்மின் காண்மின்.”* (தரைமகள்.மண்மகள்; அரமகள். தெய்வப்பெண்; ஆவி. உயிர்: ஒக்க-ஒருசேர) இத்தாழிசை "தலையொடு முடிதல்' என்ற புறத்துறையைச் சார்ந்ததாகும். மேற்கூறிய நான்கு தாழிசைகளிலும் களம்புக்க மகளிர் செய்தி கூறப்பெற்றது. உள்ளத் தெளிவிற்குக் கருணம்’ (அழுகைச் சுவை) ஒரு சாணே போன்றது. தங்கத்தை நெருப்பி லிட்டு உருக்குவதால் அது தூய்மையாதல்போல் மனிதன் மனமும் சோகம் என்றும் நெருப்பில் வாட்டப்படுவதால் பதப்படுகின்றது. மேனுட்டு அறிஞர் கூறும் Cathartic effect என்பதும் இதுவே :ாகும். இதுபற்றியே இந்த ரலம் சிறப்பாகப் போற்றப்படு கின்றது. இளிவரல் சுவை அருவருப்பு அல்லது இழிவு' தோன்ற திற்கும் செயல்கள&னத்தும் இளிவரல் சுவையை நல்கும்; நாணத் தக்க செய்கையாலும் இச்சுவை பிறக்கும். கருணுகரனும் அவ னுடைய வீரர்களும் கலிங்க நாட்டைத் தாக்கியபொழுது அவர் கள் முன் நிற்கமாட்டாது கலிங்க வீரர்கள்' மாற்றுருக் கொண்டு மறைகின்ற செய்திகளைக் கூறும் தாழிசைகளில் இச்சுவையைக் காணலாம். சிலர் சமணர்கள் போலவும், சிலர் புத்தர்கள் போலவும், சிலர் வேதியர்கள் போலவும், சிலர் பாணர்கள் :ேசலவும் மாற்றுருக் கொண்டு மறைகின்றனர். ' வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி வன்துாறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே.' (வரை-மல; மாசு-பழிச்சொல்; தூறு-புதர்; வாங்கி-களேந்து; அரை இடை, கலிங்கம் - ஆடை, உரிப்புண்ட - களேயப்பெற்ற; அமணர்.சமணர்) 29. தாழிசை.483. 30. புறப். வெண். மா8ல.79. 31. தாழிசை.466,