பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 145 பெருமிதச் சுவை ; பெருமிதம் என்பது வீரம். அஃது ஏ8னப் பெருமைகளோடும் ஒப்ப தில்லாது பேரெல்லையாக நிற்பதால் பெருமிதம் ' எனப்பட்டது என்பர் பேராசிரி யர். எனவே, அறிவு ஆண்மை பொருள் முதலிய சிறப்புக் களால் மக்கள் எல்லாரோடும் ஒப்ப நில்லாது உயர்ந்து நிற்றல் பெருமிதம் என்று கொள்ளுதல் பொருந்தும். பெருமிதம் என்பது தன்னேப் பெரியணுக மதித்தல் என்பர் இளம்பூரணர், எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனம் குன்கு மல் விட முயற்சி யுடன் செயலாற்றுவதை வீரம் மிக்க செயல் என்று நாம் கருது கின்ருே மன்ருே ? வீரனது அடையாளம் போர்க்களத்தில் முன்னணியில் நிற்பது மட்டிலும் அன்று. ஆயுள் முழுவதும் பொறிகளே அவை வழி செல்லாது அடக்க முயல்வது கூட வீரம் உள்ளிருப்பதைக் காட்டுவதாகும். எனவே, புலனத்தையும் அடக்கி யாண்ட புத்தர், சங்கரர், இராமாதுசர், காந்தியடிகள் போன்ற முனிவர்களேயும் சிறந்த வீரர்கள் என்று சொல்லுதல் வேண்டும். தம் உயிரைத் துரும்பாக மதித்துச் செயலாற்று வதையே கவிஞர்கள் வீரம் என்று இலக்கிய தெறியாகக் கொண் டுள்ளனர். காளி தேவியை வழிபடும் வீரர்களைக் குறிப்பிடுமிடத்து பெரு மிதச் சுவை வெளிப்படுவதைக் காணலாம். தாங்கள் கோகும் வரத்தைத் தரும்படியும் அதற்கு ஈடாகத் தங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை அரிந்து தருவதாகவும் வீரர்கள் பரவும் ஒலி எம் மருங்கும் கேட்கப்பெறுகின்றது. இதில் பெருமித உணர்ச்சி பொங்கி வழிகின்றது. " சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவும்ஒலி கடலொலிபோல் பரக்கு மாலோ.”* {தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்; பரக்கும்-பரவும்) வீரர்களின் வழிபாட்டியல்பினேக் கூறிய கவிஞர் வழிபாட் டினையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்ருர். அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ 48. தாழிசை-109. 1 Q