பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் విలీ யுணர்ந்த சான்ருேர்கள் தாயின் குலத்தையும் தந்தையின் குலத் தையும் ஒருங்கே பெருமையுறச் செய்யப் பிறந்தவன் என்று கருதி இவனை உபய குலோத்தமன் (இரண்டு குலத்திற்கும் உத்தமன்) என்று பாராட்டிப் பேசினர். இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் தங்கி யிருந்த காலத்தில் வேங்கி நாட்டில் தன் தந்தையாகிய இராச ராச நரேந்திரன் தோய்வாய்ப் பட்டிருப்பதாக ஒரு திருமுகம் வரப் பெற்றனன். அதைக் கண்டதும் இராசேந்திரன் மிகவும் கவன்று தன் அம்மான்மார்களிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டு வேங்கி நாட்டிற்கு விரைந்தான். வேங்கி நாட்டை அடைந்ததும் பிணிவாய்ப்பட்டுக் கிடந்த அவனுடைய தந்தை யின் நிலைமையைக் கண்டு மனமுடைந்தான். அருகில் அமர்த்து அணுக்கத் தொண்டனுய்த் தந்தையை நன்கு கவனித்துப் பணி விடைகள் செய்தான். கி.பி. 1052 இல் அவன் தந்தை இறந்து பட்டனன். தந்தையின் பெரும்பிரிவிற் காற்ருது மிகவும் வருத் தினன் இராசேந்திரன். தந்தைக்கு ஆற்ற வேண்டிய ஈமக் கடன்களையும் இறுதிச் சடங்குகளையும் குறைவின்றிச் செய்தான். அம்மான் மார்களும் ஆன்ருேச்களும் கூறிய ஆறுதல்களால் ஒருவாறு அவனுடைய துன்பம் நீங்கியது.

  • நெருநல் உளன்.ஒருவன் இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் உலகு." (நெரு நல்-நேற்று ; சற்று முன்) என்ற பொய்யா மொழியை உணர்ந்தவனன்ருே இவன் ? அமைச்சரும் உறவினரும் முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். தென்னுட்டில் சோழர்கள் பல சிற்றரசர்களையும் தம்மடிமைப் படுத்தி முடிவேந்தர்களாய் மேன்மையுற்றுத் திகழ்ந்ததைப் போலவே, தக்கணத்தின் வடபாகத்தில் மேலைச் சளுக்கியர் பெரும் புகழுடன் விளங்கினர். இவ்விரு குலத்து வேந்தர்களும் ஒருவரையொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்று எண் ணங் கொண்டவராயிருந்தனர். முதலாம் இராசராசன் காலத்தி லிருந்தே சோழர்கள் கீழைச் சளுக்கிய மன்னர்கட்குத் தம் பெண்களே மணம் புரிவித்து அன்னுரைத் தம் நெருங்கிய உற வினராகச் செய்து கொண்டிருந்தனர் என்பதை மேலே குறிப் 9. குறள்-336,