பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் 豫莎? அரசு கட்டில் ஏறியவன் வீரராசேந்திரனே. இவன் பேராற்றல் படைத்த பெருவீரன் என்பதையும், இவன் காலத்தில் நடை பெற்ற கூடல் சங்கமப் போரில் வாகை சூடியவன் என்பதையும் நாம் நன்கு அறிவோம். சாமுண்டராயன் தலைமையில் மேலேச் சளுக்கியர் படை யொன்று வேங்கி நாட்டை நோக்கிச் செல்கின்றது என்பதை அறிந்தான் வீரராசேந்திரன், தன்பாட்டன் இராசராசன் காலம் முதல் நெருங்கிய உறவினுற் பிணிக்கப்பெற்றிருந்த வேங்கி மன்னரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தனது அடலாண்மைக்கும் பெருமைக்கும் மாசு தரும் என்று கருதினுன் ; உடனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு விரைந்தான். மேலைச் சளுக்கியர்கட்கும் சோழர் கட்கும் ஒரு கடும்போர் நிகழ்ந்தது. இப்போரில் சாமுண்டராயன் கொல்லப்பட்டான் ; அவன் தலைமையின்கீழ் வந்த படைகள் யாவும் சிதறியோடின ! . இப்போர் வீரராசேந்திரன் மேலைச் சளுக்கியரோடு இரண்டாம் முறை நடத்தியதாகும். குலோத்துங்கன் தன் தந்தை இறந்த பிறகு வேங்கி நாட்டை ஆண்டமைக்குத் தக்க சான்றுகள் இல்லை. அக்காலத்தில் அவன் இளைஞனக இருந்தமையாலும், அவனுடைய சிறிய தந்தையான விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆளவேண்டும் என்று பெரு விருப்புடையவனுக இருந்தமையாலும் இளவரசுப் பட்டம் பெற்றிருந்தும் நாட்டின் ஆட்சியைப் பெற முடிய வில்லை. அவன் மாமனை வீரராசேந்திரனும் மேலைச் சளுக்கிய ருடன் போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், வேங்கி நாட்டின் நிலைமையை யுணர்ந்து தன் மருமகனின் ஆட்சி யுரிமையை நிலைநிறுத்துவது இயலாத தாயிற்று. ஆகவே, வேங்கி நாட்டை விசயாதித்தனே ஆட்சி புரிந்து வந்தான். இது பற்றிக் குலோத்துங்கனுக்கும் அவன் சிற்றப்பன் விசயாதித்தனுக் கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசயாதித்தன் செப்பேடு களாலும் அவனுடைய மகன் சத்திவர்மன் செப்பேடுகளாலும் 14. S. 1. I. Vol. III. Pages 34 and 66. 15. தந்தை உயிருடன் இருந்தபொழுதே இளவரசுப் பட்டம் கட்டப்பெற்ற நாளிலே நாட்டின் ஒழுகலாற்றின்படி விஷ்ணு வர்த்தனன்’ என்ற அபிடேகப் பெயர் அளிக் கப் பெற்றனன். Ins 396 & 400 of 1933. 16. EP. Ind. Vol XXV, p. 248. Kanyakumari Inscription of Vira Rajendra Chola, verse 77.