பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பரணிப் பொழிவுகள் நன்கு அறியக்கிடக்கின்றது. ஆளுல் அப் பகைமை முற்ருமல் நாள் செல்லச் செல்லக் குறைந்து கொண்டேபோய் இறுதியில் நீங்கியது. சத்திவர்மன் கி. பி. 1063-இல் இறக்கவே, அவன் தந்தை விசயாதித்தன் நாட்டின்மீது வைத்திருந்த பற்றும் குன்றி யது. எனவே, அவன் தன் தமையன் புதல்வகிைய இராசேந் திரனிடத்தில் (குலோத்துங்கனிடத்தில்) சிறிது அன்பு பாராட் டவும் தொடங்கினன். குலோத்துங்கனும் தன் சிறிய தந்தை உயிர் வாழும் அளவும் வேங்கி நாட்டை ஆட்சி புரியட்டும் என்று அமைதியுடன் வாளா இருந்து விட்டான். ஆயினும், தன் சிறிய தந்தைக்குப் பிறகு வேங்கி நாட்டைத் தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் மட்டிலும் அவன் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது என்பது ஒருதலை. விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்த பொழுது குலோத்துங்கன் சோழ நாட்டில் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது சோழ நாட்டை ஆண்டவன் வீரராசேந்திரன். வீரராசேந்திரன் மேலைச் சளுக்கியர்களுடன் தடத்திய போர்களில் குலோத்துங்கன் அப்போர்கள் சிலவற்றில் கலந்துகொண்டு தன் அம்மானுக்குத் துணைபுரிந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியப்பெறுகின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியருடன் போரிட்டு வெற்றி பெற்றுத் தன் பால் அடைக்கலம் புகுத்த விசயா தித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில் குலோத்துங்கனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்று அறிகின்ருேம். அன்றியும், அவன் கடாரத்தரசனுக்குத் துணை செய்யும் பொருட்டுச் சோழ நாட்டிலிருந்து பெரும் படை யொன்றை அனுப்பிய நாளில் கடாரத்திற்குச் சென்ற தலைவர் களுள் குலோத்துங்கனும் ஒருவன்.' எனவே, வீரராசேந்திரன் 17, Ryali plates of Vijayaditya VII and the Telugu Academy plates of Saktivarman II. 18. வீரராசேந்திரன் ஆட்சிக்காலம் கி. பி. 1063-1070. 19. Nilakanta Sastri, K. A. : The Colas (Second Edition) pp. 261-2. 20. தாழிசை-151 ஆணுல் இவனது மெய்க்கீர்த்திகளில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பெறவில்லை. எனவே, இவனது ஆட்சிக் காலத்தில் அது நிகழவில்லே என்பது திண்ணம். ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படையெடுப்பில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்பது உறுதி யாகின்றது. (சதாசிவ பண்டாரத்தார், T. W. : பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி 2. பக் 5. அடிக்குறிப்பு காண்க.)