பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பரணிப் பொழிவுகள் யார் கருதுவர். சோழ நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் குலோத்துங்கன் தலைநகரில் இல்லாமல் திக்கு விசயம் புறப்பட்டதும், குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்த தும் அவனே வீழ்த்துவதற்கு ஆரும் விக்கிரமாதித்தன் முயன் றதும், அதிராசேத்திர&னப்பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப் பிடாததும், அதிராசேந்திரன் காலத்தில் நடந்ததாகக் கூறப் பெறும் உள்நாட்டுக் கலகத்தில் குலோத்துங்கனும் பங்கு கொண்டிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடமுண்டு என்பதும் திரு. சாஸ்திரியாரின் கருத்து ஆகும். திரு. பண்டாரத் தசர், அதிராசேந்திரன் காலத்தில் நாடு அமைதியாக இருந்தது என்று கல்வெட்டுச் சான்றுகளால் உறுதிப்படுத்தி யதும், விரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்ற பட்டம் புனேந்து கொண்டவர்களாதலின், குலோத்துங்க னுக்கு முன்னதாகப் பரகேசரி என்ற பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் இருந்தமையையும், அவன் உரிமையையும் ஒப்புக் கொண்டவன் என்று காட்டியதும் எவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய காரணங்களாகும். விக்கிரமாங்கதேவ சரிதமும் விக்கிரமசோழன் உலாவும் அதிராசேந்திரன் ஆட்சியைக் குறிப் பிடுகின்றன. கலிங்கத்துப் பரணி அவன் ஆட்சியைக் குறிப் பிடாததற்கு யாது காரணமாக இருத்தல் கூடும் என்பதை ஊகிக்க முடியவில்லை. வீரராசேந்திரனுக்குப் பிறகு சில திங்கள் வரை அரசாண்ட அதிராசேத்திரன் கி. பி. 1070 இல் இறந்த பிறகு சோழர் மரபில் அரச குமாரன் ஒருவரும் இல்லாமையால், குறுநில மன்னரது கலகமும் உள் நாட்டுக் குழப்பமும் எழுந்தன. சோழ நாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்ருெளுத் துன்பத்துள் ஆழ்ந்தனர். சயங்கொண்டார் இந்நிலையை,

  • மறையவர் வேள்வி குன்றி

மனுநெறி யனைத்தும் மாறித் துறைகளோ ராறும் மாறிச் சுருதியும் முழக்கம் ஒய்ந்தே.”* (சுருதி - வேதம்.) 26. The Colas (Second Edition) - p. 294. 27, ibid p. 294 and 295. 28. சோழ வேந்தர்களிடம் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்கள் மாறி மாறி வரும் என்பது அறியத்தக்கது. தந்தை பரகேசரியாக இருப்பின் மகன் இராசகேசரியாக இருப்பான். 29. தாழிசை-258,