பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重62 பரணிப் பொழிவுகள் கொண்டிருந்த குலோத்துங்கன் அறிந்து கங்கை கொண்ட சோழ புரத்திற்கு விரைந்தான். அங்கிருந்த அமைச்சர், படைத்தலைவர் முதலான அலுவலர்கள் அனைவரும் சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமைபற்றி இவனே அரசனுக ஏற்றுக் கொண்டு முடி சூட்டினர். அந்த நாளிலிருந்துதான் குலோத்துங்கன்' என்ற அபிடேகப் பெயரைப் பெற்ருன். அதற்கு முன்னர் அவ னுக்கு வழங்கி வந்த பெயர் இராசேந்திரன்’ என்பதை நாம் அறிவோம், குலோத்துங்கனின் ஆட்சி முறை முதலிய செய்திகளை வர லாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற் கொண்ட போர்களேப்பற்றிக் கலிங்கத்துப் பரணி குறித்திருப் பதை நான்காம் பொழிவில் கண்டோம். அவன் கருணுகரத் தொண்டமானேக் கொண்டு கி. பி. 1112இல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணி என்ற நூலின் பொரு னாக அமைத்தது. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும், கல்வெட்டுக் களிலும் காணப்பெறும் செய்திகளுடன் ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். அவற்றை விரிப்பின் இப்பொழிவும் பெருகும் என அஞ்சி இத்துடன் நிறுத்துகின்றேன். அடுத்து, இவனுடைய தளபதியும் கலிங்கப்போரை மேற் கொண்டவனுமான கருணுகரத் தொண்டைமானேக் குறித்துச் சில செய்திகளை அறிவோம். (முன்பக்க தொடர்ச்சி) தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவை தனிமையும் தவிர வந்து புனிதத் திருமணி மகுடம் உரிமையிற் சூடித் தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத் தொன்னில வேந்தர் சூட முன்னே மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச் செங்கோல் திசைதொறும் செல்ல' (S. I. I. Vol III No. 701.) 34. இந்நூல் பக்கம்-97.105. - 35. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி 2 (மூன்ரும் பதிப்பு) pp. 10 - 40.