பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பரணிப் பொழிவுகள் கலிங்க மெறிந்த கருணு கரன்றன் களப்போர் பாடத் திறமினே.”* (கருளுகரன்.கருணக்கடலாகிய அயோத்தி அண்ணல் : இகல்-வலி ; சிலை-வில்; கேட்பீர்-கேட்க விரும்பும் பெண்களே ; கருளுகரன்-கருணுகரத் தொண்டைமான் , களப்போர்-கலிங்கப் போர்) என்று பாடியுள்ளார் என்று கருதலாம். இருவரும் கருணுகரன் என்ற பெயருடையவராயினும் ஒருவன் இலங்கையெறிந்த புகழு டையவன் ; மற்றவன் கலிங்கம் எறிந்த புகழுடையவன். குலோத் துங்கணேத் திருமாலின் அவதாரம்’ என்று சிறப்பித்த கவிஞர் பெருமான் அவன் தளபதியாகிய கருணுகரனை அத்திருமாலின் திருவாழி' என்று போற்றியுள்ளார். ' கண்ணு கியசோ ழன்சக் கரமாங் கருணு கரன்வாரணமேற் கொளவே ’** (வாரணம் யானை.) என்று கலிங்கப்போர்மேல் செல்லுமிடத்திலும்,

  • தண்டு கொண்டவன்

சக்கரம் வந்ததே ' (தண்டு-சேனை.) என்று எங்கராயன் வாக்காலும் இதனை அறியலாம். கருணுகரத் தொண்டைமான் பல்லவ அரசர் மரபுவழி வந்தவன் ; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் ; வண்டை என்ற ஊரின் தலைவன். இங்ங்னம் சிற்றரசனுகத் திகழ்ந்த இப்பெருமகன் குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதி யாகவும் மந்திரத் தலைவகுகவும் விளங்கின்ை. கலிங்கத்துப் பரணி ஆசிரியர் இச்செய்திகளையும் தம் நூலில் குறிப்பிடுகின்ருர். ‘ மண்ட லீகரும் மாநில வேந்தரும் வந்து ணங்கு கடைத்தலே வண்டைமன் தொண்டை மான் முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே”.* 38. தாழிசை.64. 41. தாழிசை.363, 39. தாழிசை-234, 42. தாழிசை.388. 40. தாழிசை-363, 388. 43. தாழிசை-327.