பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் | 85 (மண்டலீகர்-மண்டலத்தலைவர் ; உணங்குதல்-வருத்துதல் : கடைத்தலைவாயில் ; வண்டை-ஒரு நகரம் ; மத்திரம்-சூழ்ந்து எண்ணுதல் ; பாரகர்-கரைகண்டவர் ; கழல்-பாதம்} முதற்குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்த நிலயினேக் குறிப்பது இத் தாழிசை.

  • இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை

எறிவ னென்று கழல் தொழுதனன் மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநகர் அரசனே." (இறை - குலோத்துங்கன் , எழு கலிங்கம் - ஏழு பிரிவான கலிங்கம் ; எறிவன் - அழிப்பேன் ; மரபு . நன்மரபு : வண்டை நகர் அரசன் - கருணுகரன்) குலோத்துங்கன் இட்ட கட்டளையைக் கேட்டவுடன் கருளுகரத் தொண்டமான் போருக்கு எழுத்தமையைக் காட்டும் சொல் லோவியம் இது.

  • வண்டை வளம்பதி பாடீரே

மல்லையும் கச்சியும் பாடீரே பண்டை மயிலேயும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடிரே' (வண்டை-கருணுகரன் ஊர் : கச்சி-காஞ்சிபுரம் ; பல்லவர் தோன்றல்-கருணுகரன்.) பேய்கள் கூழடுவதற்கு அரிசி குற்றுங்கால் உலக்கைப் பாட்டு பாடிக் கொண்டே குற்றுவதைக் காட்டுவது இத்தாழிசை. இன்னும் கருணுகரன் பல இடங்களில் 'வண்டை நகர் அரசன்' என்றும், வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெற்றுள் வாான். இவ்விடத்தில் ஒரு முக்கிய வரலாற்றுச் செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். பிற்க லச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெரு வலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், ஏனைய அலுவலர் களாகவும் அமர்ந்திருந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணுட்டிலும், பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர் கட்குத் தலைவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். இச் செய்தியைப் 44. தாழிசை-341. 45. தாழிசை.534,