பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰份登 பரணிப் பொழிவுகள் துள்ளான். குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனுய் அமைந்த கருணுகரன் வண்டை நகரின் கண் இருந்து சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் 'வண்டையர்க்கரசு என்று சுட்டப்பெறுகின்றன். தம்பியைப் போலவே தமையனும் பேரரசனை குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர் களுள் ஒருவளுய், நெருங்கிய நண்பகுய், இருந்து வந்தான் என்று ஊகம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. இந்த தட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்கரையில் பரி வேட்டையாடியபின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதர்களுள் மூத்தோனிருப்பவும் இளையோன் அரசிய வில் தலைமை வகிக்க நேர்ந்தது, " ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னது அவருள் அறிவுடை யோனறு அரசும் செல்லும்' என்ற ஆன்ருேர் கருத்துப்படி ஒக்குமென்றே கொள்ளல் வேண்டும். கலிங்கப் போரின் வெற்றிக்கு முக்கிய வில் விசையாகத் திகழ்ந்தவன் கருணுகரத் தொண்டைமானே என்பதைக் கலிங் கத்துப் பரணி உறுதி செய்கின்றது. சோழப் படைகளால் அழிக்கப்பட்டன போக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் நாற்புறமும் சிதறியோடி ஒழிந்தன. தொண்டைமான் வாகை சூடிக் குலோத்துங்கன வந்தடைகின்றன். இதனைக் கவிஞர் பெருமான்,

  • கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்

கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச் சுடர்ப்படைவாள் அபயனடி அருளி ைேடுஞ் சூடினுன் வண்டையர்கோன் தொண்டைமானே’.' (சயத்தம்பம்-வெற்றித்துரண் ; கரி.யானை ; தனம்-செல்வம் : அபயன் -குலோத்துங்கன் ) என்ற தாழிசையால் இச் செய்தியை நமக்கு அறிவிக்கின்றர். முதற் குலோத்துங்கனது 42-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக்கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. அச்செய்தி கூறும் கல் வெட்டுப் பகுதி வருமாறு : w T;0. புறம்-233, 51. தாழிசை-471.