பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 70 பரணிப் பொழிவுகள் படையெடுப்பு நடந்திருத்தல் வேண்டும் என்பது உறுதிப்படு கின்றது என்பதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பு கின்றேன். கலிங்கப்போர் நடைபெற்ற காலத்தில் குலோத்துங்கன் மகன் விக்கிரம சோழன் இளங்கோவாக இருந்தனன் என்றும், அவனும் கருணுகரனுடன் கலிங்கப் போருக்குச் சென்றனன் என்றும், ஆங்கு நடந்த போரொன்றில் அவன் வெற்றி பெற்ருன் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். விக்கிரம சோழன் இள வயதில் கலிங்க நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, ஆங்கு நடந்த போரொன்றில் வெற்றி பெற்ருன் என்பது உண்மையே 4. ஆயின், அது சயங்கொண்டார் பாடிய கலிங்கப் போரைத்தான் குறிக்கின்றது என்று துணிய இடமில்லை. மற்று, அப்போர் தெலுங்க வீமன் என்ற கலிங்க மன்னனுடன் நடத்தியதென்பது, ' தெலுங்க வீமன் விலங்கன்மிசை யேறவும் கலிங்க பூமியைக் கனலெரி பருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வேங்கை மண்டலந் தாங்கினி திருந்து வடதிசை யடிப்படுத் தருளி' எனவரும் அவனது மெய்க்கீர்த்தியால் தெளிவாகின்றது. ஒட்டக் கூத்தரும் தம் உலாக்களில்,

  • ஏ&னக் கலிங்கங்கள் ஏழனையும் போய்க்கொண்ட

தானத் தியாக சமுத்திரமே." * கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்’’.57 என்று குறிப்பிடுவனவும் இக்கலிங்க வெற்றியாகவே கருத வேண்டும். குலோத்துங்கன் நடப்பித்த கலிங்கப்போர் விக்கிரம சோழன் நடத்திய அப்போரினும் வேருன தென்பது கல்வெட்டு ஆய்வாளர்களும் ஒரு முகமாக ஒப்புக் கொள்வர். சயங்கொண் டார் பாடிய கலிங்கப் போருக்கு விக்கிரமனும் சென்றிருப்பின், 54. ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழனது கலிங்க வெற்றி பற்றிப் பாடிய பரணி யொன்றும் உண்டென்பது, தக்கயாகப் பரணி உரையால் அறியப்பெறுகின்றது. அந்த நூல் இக்கலிங்க வெற்றியைப் புகழ்வது போலும். 421 證 இராகவய்யங்கார், மு; ஆராய்ச்சித் தொகுதி (1938) பக் 56. விக்கிரம சோழன் உலா-கண்ணி 381. 57. குலோத்துங்க சோழன் உலா-கண்ணி-28,