பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் # 71 அப் போருக்குச் சென் றிருந்த த இனத் தலைவt, துணேத் தானத் தலைவர் இவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தனித்தனித் தாழி: சைகளால் பாடும் கவிஞர் பெருமான் இளங்கோ என்பது விளங்கத் தோன்ற அவ்விக்கிரமன் பெயரையும் குறிப்பிட்டுச் சிறப்பித்திருப்பர் அல்லவா ? ஆளுல், மேற்காட்டிய மெய்க்கீர்த்தி குறிப்பிடும் கலிங்கப் போர் குலோத்துங்கன் கி. பி. 1095-6 இல் நடத்திய தென் கலிங்கப் போர் என்றும், அப்போருக்கு விக்கிரமன் இளவயதில் சென்றிருத்தல் வேண்டும் என்றும் பேரன் சிரியர் மு. இராகவய்யங்கார் கருதுகின்ளுர்கள். குலோத்துங்கன் இரண்டாம் முறையாக நடத்திய வடகலிங்கப் போரேச, அவன் ஆட்சி முடிவுக்குச் சில ஆண்டுகட்கு முன்னர்க் கருணுகரன் நடத்தியதாகும் என்பது பேராசிரியரின் கருத்தாகும். கல்வெட்டு ஆய்வாளர்கட்கும் இக்கருத்து உடன்பாடாகும். கலிங்கத்துப் பரணிப் படிகளிலும் தண்டியலங்கார மேற் கோளிலும் கலிங்கப் போரையும் கருளுகரனேயும்பற்றிக் காணப் பெறும் ஒரு சில பழம் பாடல்களையும் ஈண்டுக் குறிப்பிட விரும்: கின்றேன். “ தடங்குலவு நாண்மாலேத் தாமத்தன் கையில் விடங்குலவு வெல்வான் விதிர்ப்ப - நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வரண்மே வியகலிங்கர் மண்”.* (ஈற்றுச் சீர் மன்' என்பதுவும் பாடம்.)

  • சுரநிரைத் தாலன்ன தண்பனி

தூங்கத் தலைமிசைசெங் கர நிரைத் தாரையும் காண்பன்கொ லோகலிங் கத்துவெம்போர் பொர நிரைத் தார்விட்ட வேழமெல் லாம்பொன்னி நாட்டளவும் வரநிரைத் தான் ருெண்டை மான்வண்டை மாநகர் மன்னனே." இப்பாடல்கள் இரண்டும் சென்னை பழம் பொருட்காட்சி بائع بتوي (Museum) கையெழுத்து நூல் நிலையத்திலும், தஞ்சை சரசுவதி 58. தாழிசை-364, 365. 59. ஆராய்ச்சித் தொதி - பக். 438. 60. கலிங்கத்துப் பரணிப் படியொன்றில் காணப்பெறுவது. 61, கலிங்கத்துப் பரணிப் படி,