பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பரணிப் பொழிவுகள் பருவத்திலேயே இலக்கண இலக்கியங்களே முறையே கற்றுத் தேர்ந்த வித்தகர். ஒருநாள் கவிஞர், அபயனைக் காண விழைந்து அவனுடைய அவைக்களம் அணுகினர். அப்போது அவ்வரசன் இவரை தேசக்கி அவருடைய ஊர் யாது என வினவ அவரும் உடனே,

  • செய்யும் வினையும் இருளுண் பதுவும் தேனும் நறவும் ஊனும் களவும் பொய்யும் கொலேயும் அறமும் தவிரப்

பொய்தீர் அறநூல் செய்தார் தமதுார் கையும் முகமும் இதழும் விழியும் காலும் நிறமும் போலும் கமலம் கொய்யும் மடவார் கண்வாய் அதரம் கோபம் கமழும் தீபங் குடியே.’’ ’ (நறவு-தேன் இதழ்-உதடு கமலம்-தாமரை : அதரம். உதடு) என்ற கவிதையால் விடையிறுத்தனர். அதனேக் கேட்ட அக்காவலன் இவரது கல்விப் பெருக்கையும் கலேயுணர்ச்சியையும் கண்டு இவரைத் தமது அவைக்களப் புலவராய் அமர்த்திக் கொண்டான் என்ற செய்தியை அறிகின்ருேம். ஆனல் தீபங் குடி என்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஒருரும், சோழ தாட்டில் ஒருரும் உள்ளன. தஞ்சை மாவட்டத்துக் கல்வெட் டொன்று இளங்கோ நாட்டுத் தீபங்குடி' என்று ஒர் ஊரைக் குறிக்கின்றது. இவற்றுள் சயங்கொண்டார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. எனினும், இவர் முதற் குலோத்துங்கனேச் சிறப்பித்திருப்பதால் சோழ நாட்டுத் தீபங்குடியினர் என்று கோடலே பொருந்தும். மேற் கூறியவாறு அவர் பிறந்த ஊர் இன்னதென்பதோடு கூட, அவரது பிறப்பு, வளர்ப்பு, இயற்பெயர், வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு அறியக்கூடவில்லை. ஆயினும், இவர் கலிங்கத்துப் பரணி பாடியது.குறித்துச் செவிவழிச் செய்தி ஒன்று வழங்கி வருகின்றது. கலிங்கப் போர் நிகழ்ந்த பிறகு ஒருநாள் கவிஞரேறும் காவலரேறும் 68 தமிழ் நாவலர் சரிதை.117. இப்பாடல் "தீபங்குடிப் பத்து, என்னும் நூலில் சில பாட வேறுபாட்டுடன் மூன்ருவது பாட்டாக வுள்ளது. ; : * 69. A. R. No, 28 of 1917.