பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் 麓?総 அரசவையில் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந் தனர். அது காலே அவ்விறைவன், “செந்தமிழ்ப் புலவீt, கலிங்க நாட்டைச் சயங்கொண்டமையால், யானும் தங்களைப் போல 'சயங்கொண்டான்’ ஆயினேன்’’ என்று வேடிக்கை யாக விளம்பினன். அதனைச் செவிமடுத்த கவிஞர் பெருமான் அங்ங்னமாயின், 'சயங்கொண்டானேச் சயங்கொண்டான் பாடுதல் சாலத் தகவுடைத்தாம்’ என இயம்பினர். இவ்வுரை யாடல் நிகழ்ந்த சில நாட்களில் கலிங்கத்துப் பரணி'யைப் பாடி முடித்தனர் என்பதே அந்தச் செய்தியாகும். இந்த நூல் அரங் கேற்றப்பெறுங்கால் அந்நூலிலுள்ள பாடல்களின் சொற்கவை பொருட் சுவைகளைக் கண்டு வியந்து ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டிப் புலவரையும் அவரது நூலினையும் சிறப்புச் செய்ததாகவும் அச்செவிவழிச் செய்தியால் அறிகின் ருேம், இஃதெவ்வாருயினும், சயங்கொண்டாருக்கு அக்கொற்றவன் பெரும் பரிசு அளித்திருத்தல் வேண்டும் என் பதில் அணுவளவும் ஐயமில்லை. கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் முதற்குலோத்துங்கன் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்று ஊகம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லே. சமயம் : கவிஞர் பெருமான் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதனையும் உறுதியாக அறுதியிட முடியவில்லை. இவரது ஊரைப்பற்றிய மேற்கூறிய பாடலில் இரவில் உண்ணுமை, உயிர்க் கொலே புரியாமை முதலிய சமண் சமயக் கோட்பாடுகளை நன்கு விளக்கியிருத்தலால், அப்போது இவர் சமணராயிருந்தன ரென்பது தெள்ளிதிற் புலனுகின்றது. 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலேக் கண்டேனே என்னும்' என்ற திருவாய் மொழிப்படி இவர் குலோத்துங்கனின் பிறப்பினை, " அன்றிலங்கை பொருதளித்த அவனேஅப் பாரதப்போர் முடித்துப் பின்ன வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனஉதித்தான் விளம்பக் கேண்மின்.”* (பொருது-போர் செய்து; கதிராழி-ஒளியையுடைய சக்கரம்) என்று திருமால் அவதாரமாகவே கூறுகின்றன ரேனும் இவரை வைணவர் என்று கொள்ளுவதற்கில்&ல.

  • புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன் தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்

70. திருவாய்மொழி-4 . 4 : 8. 71. தாழிசை-232.