பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17é பரணிப் பொழிவுகள் செயல்வண்ணம் நிலநிறுத்த மலேமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்.' (புயல் வண்ணன் - திருமால், புனல் - நீர்; பூமிசையோன். தான்முகன் செயல் - திருமணச் சடங்கு ; புவனம் - உலகம் ; வாழ்க்கை - இல்லற வாழ்க்கை , வண்ணம் - தன்மை ; மலே மகளைப் புணர்ந்தவன் . சிவன்) என்று முதலில் சிவ வணக்கம் கூறியிருத்தலாலும், உமாதேவி, ஆண்முகன், முருகவேள், உமாதேவியின் கூறுகளான அன்னையர் எழுவர் (சப்தமாதர்) ஆகியோருக்கெல்லாம் தனித்தனியாக வணக்கம் கூறியிருப்பதாலும் இவரைச் சைவ சமயத்தினர் என்று உறுதியாகக் கூறலாம். இதனால், இவர் முதலில் சமணராக இருந்து குலோத்துங்கனை வந்து அடைந்த பின்னர் சைவராய் மாறி யிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. மேலும் நான் முகன், திருமால் முதலானுேர்க்கும் வணக்கம் கூறியிருத்தலால் இவர் சமயப் பொறையுடையவர் என்பதற்குத் தட்டில்லை. காலம் : இனி, இவர் வாழ்ந்த காலத்தைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். முதற் குலோத்துங்கன் (கி. பி. 1070-1118) கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் ஆட்சிபுரிந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங்கப்போர் நடை பெற்றது கி. பி. 1112 இல், இந்தப் போரைத்தான் சயங்கொண் டார் கலிங்கத்துப் பரணியின் நூற்பொருளாக அமைத்துக் கொண்டார். எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத் துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்வதற்குத் தடை இல்லை. இப்படிக் கொண்டால் இக்கவிஞர்பிரான் கம்பநாடனுக்கு முந்தி யவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பநாடன் தன் காவியத்தைக் கி. பி. 1178 இல் பாடி முடித்து கி. பி. 1185 இல் அரங்கேற்றினர் என்பதைப் பல சான்றுகளுடன் நிறுவியுள்ளார்கள்' என்பது ஈண்டு நினைதற் பாலது. எனவே, இவரைக் கம்ப நாடன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர் என்றே கொள்ளல் வேண்டும். புகழ்க் கொடை : இவ்விடத்தில் முக்கிய நிகழ்ச்சியொன் றினக் குறிப்பிட விரும்புகின்றேன். சயங்கொண்டார் அபயனுக் களித்த புகழ்க்கொடை அவன் அவருக்கு உதவியிருக்கக் கூடிய 72. தாழிசை.. 73. வையாபுரிப்பிள்&ள, 5 : தமிழ்ச் சுடர் மணிகள்-கம்பர். பக் 130.