பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் 177 நிலையாப் பொருட் கொடையினும் பல்லாயிரம் மடங்கு பெரிது என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ ?

  • கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்

மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றவர் செய்யும் உடம்பு' (மலரவன் - நான்முகன்) என்று ஆன்ருேர் கூறியவாறு நான்முகன் படைத்த இவ்வுடம்பு அழிய, கவிஞர் செய்த காவியம் என்றும் மாயாது திலைத்து நிற்குமன்ருே ? ஒரு சமயம் இவர் அபயன்மீது முனிவு கொண்டு பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையில்,

  • காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்

பாவலர் நல்கும் பரிசு ஒவ்வா-பூவில்திலே யாகாப் பொருளை அபயன் அளித் தான்புகழாம் ஏகாப்பொருள் அளித்தேம் uirii.”** (காவலர்-அரசர், ஈகை,கொடை பாவலர்-புலவர்; تقطيعطي என்று காணப்பெறும் வெண்பா ஒன்ருலும் இதனை அறியலாம். குலோத்துங்கன் தனக்குச் செய்த சிறப்புக் குறைந்து தன் மனத்தை வருத்தவே அது கண்டு பொருதவராய்ச் சினத்து சயங்கொண்டார் இதனைப் பாடினர் என்று சிலர் கருதுவர். கவித் திறமை : சயங்கொண்டாரது பாடல்களின் சிறப்பினே முன்னர் நடைபெற்ற பொழிவுகளில் கண்டோம். இவரது பாடல்களனைத்தும் சொல் நயம், பொருள் நயம், ஓசை நயம், சந்த இன்பம் கொண்டவை என்பதனையும் அறிந்தோம். இவர் கமுன்னேர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போ நிறுவம்' என்ற இலக்கிய மரபினையொட்டிப் பாடும் பெற்றியுடையவர் என்பதையும் முன்பொழிவுகளில் ஆங்காங்கு காட்டியவற்றை நினைவு கூர வேண்டுகின்றேன். எனவே, இவர் பாடல்களில் இவர் காலத்திற்கு முற்பட்டோரின் கருத்துக்களைக் காணலாம். எடுத்துக் காட்டாக ஒன்றை ஈண்டுக் காட்ட நினைக்கின்றேன். . ”معصحمدصجیحتمبیبسمـیے۔ --سمیعیبیہ ہے۔ 74. குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம் - 7. 75. தமிழ் நாவலர் சரிதை-! 18. 76. நன்னூல்-நூற்பா. 9. 12