பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் | | ஆயினும், இவ்வாற்றல் மட்டிலும் செயற்பட்டால் போதாது; அதற்கேற்ற சூழ்நிலையும் அமைதல் வேண்டும். . உலக இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக்கினுல் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை என்பது புலனுகும். இதிலிருந்து அக்காலத்தில் கவிதை ஆற்றல் படைத்தவர்கள் தோன்றவே இல்லை என்று முடிவு கட்டுதல் தவறு. பெரும் புலமையும் பேராற்றலுமுடைய கவிஞர்கள் தோன்றியிருந்துமிருக்கலாம்.ஆனல் அந்தக் காலத்து அரசியல், பொருளியல் முதலிய காரணங்களால் அவர்கட்குத் தக்க சூழ்நிலை வாய்க்கவில்லை எனக் கருதுவதே பொருத்தமாகும். பிறந்த இனம் (the race), சூழ்நிலை (milieu), சரியான காலம் (the moment) ஆகிய இம்மூன்றும் இணைத்து செயற்பட்டால்தான் ஒரு கவிஞனின் தனித்திறமை வெளிப்படும் என்று பிரெஞ்சு அறிஞர் டெயின் (Taine) என்பார் தாம் எழுதியுள்ள ஆங்கில இலக்கிய வரலாறு' என்ற நூலில் கூறியிருப்பதையும் ஈண்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். பருவத்தால் அன்றிப் பழா’ என்ற நம் நாட்டு முதுமொழியின் உண்மை இலக்கியத் துறைக்கும் பொருந்தும். தக்க சூழ்நிலை அமையாதபொழுது பேரிலக்கியங்களைப் படைக்க மேற்கொள்ளும் முயற்சி பயனற்ற தாகப் போய்விடும். உலக இலக்கிய வரலாற்றில் இதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. படைப்பாற்றல் செயற்படுவதற்குச் சில பொருள்கள் இன்றி யமையாதவை. பக்குவப்பட்ட நிலையில் அப்பொருள்கள் அமையாவிடின் படைப்பு எங்ங்னம் முகிழ்க்கும்? அப் பொருள்கள் பக்குவ நிலையினே எய்தும்வரை இலக்கிய ஆசிரியன் காத்திருக்கத்தான் வேண்டும். இலக்கியத்தைப் பொறுத்த மட்டிலும் கருத்துக்களே அப்பொருள்களாகும். கருத்துக்கள் கலையுணர்ச்சியுடன் கையாளப்பெற்ருல் அவை பேரிலக்கியங் களாக வடிவெடுக்கும். இலக்கியங்களில் காணப்பெறும் கருத் துக்கள் யாவும் சிறந்தவை; பண்பட்ட நிலையிலிருப்பவை. இதனுல் வாழ்க்கையே இலக்கியமாக வடிவெடுக்கின்றது ' 15. “For a creation of master-work of literature two powers must concur, the power of the man and the power of the moment, and the man is not enough of the moment” (Mathew Arnold). 16. Literature is a criticism of life p. 14 (Hudson : An Introduction to the Study of Literature.) (1946)